ஜப்பானில் மக்கள்தொகை குறைந்து வருவதாகவும், வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. உலக அளவில் பொருளாதார வளர்ச்சியில் முன்னிலை பெற்றுவரும் ஜப்பானில், மக்கள்தொகை குறைந்து வருகிறது. கடந்த 2013ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, ஜப்பானின் மக்கள்தொகை 12 கோடியே 70 லட்சம் பேர். இந்நிலையில் இங்கு மக்கள்தொகை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஜப்பானில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. சமீபத்திய கணக்கெடுப்பின்படி, மக்கள்தொகையில் சுமார் 2.15 லட்சம் குறைந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக இந்த சரிவு இருந்து வருகிறது.
ஜப்பானில் நான்கில் ஒரு பங்கு பேர் 65 வயதை தாண்டியவர்கள். இவர்களின் தற்போதைய எண்ணிக்கை ஒரு கோடியே 10 லட்சம். இளம் வயதுடையவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 30 லட்சம். தலைநகர் டோக்கியோவில் மட்டும் மக்கள்தொகையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை.
ஜப்பானில் இதே நிலை நீடித்தால் வரும் காலங்களில் மக்கள்தொகை இன்னும் சரிய வாய்ப்புள்ளது. வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ஓய்வூதிய திட்டத்துக்கு ஜப்பான் அரசு அதிக தொகை செலவிட்டு வருகிறது.
குறைந்துவரும் மக்கள்தொகை குறித்து அந்நாட்டு அரசு அதிகாரிகள் கூறுகையில், “நவீன வாழ்க்கை முறை, விவாகரத்து போன்றவற்றால் குழந்தை பெற்றுக்கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஜப்பானை சேர்ந்த பலர் வெளிநாடுகளில் குடியேறி விட்டனர். இதுபோன்ற காரணங்களால் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது” என்றனர்.
No comments:
Post a Comment