துபாய் வருகை தந்த மமக சட்டமன்ற தலைவர் ஜவஹிருல்லாஹ் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது தங்களது வீடு வாசல் குடும்பம் தாய் நாட்டை பிரிந்து தியாகம் செய்து கடுமையாக உழைத்து வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் வெளிநாட்டிலிருந்து அனுப்பு பணத்திற்க்கான கமிசன் தொகையை மத்திய அரசாங்கம் உயர்த்தியுள்ளது கடும் கண்டனத்துக்குறியது. இதனால் வெளிநாட்டில் பணி புரியும் ஏழை தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். சிலர் சிறிய தொகைதானே என்கிறார்கள் ஆனால் ஏழை தொழிலாளர்களின் மாத வருமானத்தை ஒப்பிடும்போது பெரும் தொகையாகும்.2016ல் இன்னும் உயரும் என சொல்கிறார்கள்.உடனடியாக இதனை ரத்து செய்ய வேண்டும்.வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலனை பற்றி பேசும் மோடி அரசாங்கம்தான் மற்றொரு புறம் இது போன்ற வேலையை செய்கிறது.
மேலும் வெளிநாடுகளில் வாழ்பவர்கள் குறிப்பாக தமிழர்கள் இறந்து விட்டால் அவர்களின் உடலை தாயகம் எடுத்து வருவதற்கும் ,உடல் நிலை குறைபாடு ஏற்பட்டால் உதவுவதற்கும் இன்னும் பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்துவதற்கும் ளிநாட்டு வாழ் தமிழர் நலனை பாதுகாக்கும் வகையில் தமிழகத்தில் வெளிநாட்டு வாழ் தமிழர் நலச் சட்டம், 2011ல் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, வெளிநாட்டு வாழ் தமிழர் நலனுக்காக, தனி நிதியம் உருவாக்க வழி செய்யப்பட்டு. வாரியம் ஒன்றை உருவாக்கவும், சட்டம் அனுமதி அளிக்கிறது. ஆனால் இது வரை இச்சட்டம் செயல்படுத்தபடாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் நிறைவேற்ற கோரி போராட்டங்கள் நடத்துவது குறித்து எங்கள் கட்சி சார்பாக ஆலோசிக்கபடும்.
கடல் அட்டைக்கு தடை விதித்தது அப்போதைய மத்திய திமுக அமைச்சராக இருந்த டி ஆர் பாலுவின் தவறாகும் உலகின் பல்வேறு நாடுகளில் கடல் அட்டைக்கு தடையில்லை லட்சக்கணக்கில் பெருகும் இனமான கடல் அட்டை அழியும் இனமல்ல ஆனால் இதனை பிடிப்பதாக கூறி ராமநாதபுரம் மாவட்டத்தின் ராமேஸ்வரம் ,கீழக்கரை, மண்டபம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மீனவர்களை கைது செய்வது கண்டிக்கதக்கது. தடையை நீக்குவது குறித்து அரசாங்கத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன் ஆனால் எவ்வித பயனும் இல்லை. வன உயிரனங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும் மத்திய அரசாங்கம் மனித உயிர்களை பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை காட்டு பன்றியை கொன்றால் ஜெயில்லில் தள்ளுகிறார்கள் ஆனால் ஆந்திராவில் 20 அப்பாவி தமிழர்களை சுட்டு கொன்றுள்ளார்கள் நெஞ்சை உருக்கும் இச்சம்பவத்திற்கு எவ்வித நடவடிக்கையும் இல்லை கேள்வியும் இல்லை கேட்பாறும் இல்லை .அனைத்தையும் பேஸ்புக்கிலும் ,டிவீட்டரிலும் பதிவு செய்யும் பிரதமர் மோடி ஏன் இந்த படுகொலை குறித்து ஒரு வார்த்தை கூட கண்டனம் தெரிவிக்கவில்லை
இந்திய வரலாற்றிலேயே இப்படி ஒரு பிரதமரை கண்டதில்லை.கோட் அணியவே கோடிக்கணக்கில் செலவழிக்கிகிறார் தன்னை முன்னிலை படுத்துவதில் மோடிக்கு நிகர் மோடிதான் அதில் ஒன்றுதான் தன்னுடைய பெயரை தன் தன் சட்டையில் பதித்தது இது போன்று முன்னாள் எகிப்த் அதிபர் முபாரக் என்பவரும் செய்துள்ளார். தற்போதை மோடி அரசாங்கம் ஏழை எளிய மக்களுக்கு எதிரான அரசாங்கம். ஐக்கிய முற்போக்கு கூட்டணி கொண்டு வந்த ஏழைகளுக்கு உதவும் திட்டமான 100 நாள் வேலை வாய்ப்பை ரத்து செய்து ஏழைகளின் வயிற்றில் அடித்து விட்டார்கள். ஆந்திராவில் சுட்டுகொல்லப்பட்ட திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் ஆந்திராவிற்கு சென்றதற்கு முக்கிய காரணம் இது போன்ற திட்டத்தை ரத்து செய்தததால்தான் ஏற்பட்ட வேலை இல்லா நிலை என்பதை உண்மை அறியும் குழுவில் இடம்பெற்ற நான் அறிந்தேன்
அதே போன்று பேசுவது ஒன்று செயல்படுத்துவது வேறொன்று மோடி அவர்கள் வெளிநாடுகளில் மதசார்பின்மை பற்றி பேசுகிறார் ஆனால் இங்கே அவரது கட்சியை சார்ந்தவர்கள் மத நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் பேசி வருகிறார்கள். மோடி ஏன் இதனை கண்டிக்கவில்லை .தற்போதையை மோடி அரசில் பெரும் கோடிஸ்வரார்கள் மாபெரும் கோடீஸ்வரர்கள் ஆகிறார்கள் ஆனால் ஏழை எளிவர்கள் பரம ஏழைகளாக வறுமையில் உழல்கிறார்கள் ஏழைகளை வறுமையில் ஆழ்த்தும் பல திட்டங்களை செயல்படுத்துகிறார்கள்.அதில் ஒன்று நிலம் கையகப்படுத்தும் சட்டம் தமிழக அரசாங்கத்தின் செயல்பாடு ஓரளவிற்கு திருப்தி அளிக்கிறது. எஸ் பி பட்டிணம் வாலிபர் சுட்டு கொல்லப்பட்டது தொடர்பாக வரலாற்றிலேயே முதல் முறையாக போலீஸ் எஸ் ஐ மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது வரவேற்கதக்கது.
அதே போன்று முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஸ்ணமூர்த்தி இவரை போன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்தவர்கள் யாருமில்லை ஆனாலும் அவர் மீது எவ்வித பாரபட்சமும் இல்லாமல் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சில திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அத்திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சட்டமன்ற உறுப்பினராக என்னுடைய முயற்சியில் ரூ 30 கோடிகளுக்கு மேல் சாலை பணிகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தபட்டுள்ளது.அதே சட்டமன்ற உறுப்பினர் நிதியின் மூலம் எனது தொகுதிகுட்பட்ட பல் வேறு ஊர்களில் பள்ளிக கட்டிட நிதி உள்ளிட்ட பல்வேறு நல ப்பணிகள் மேற்கொண்டுள்ளேன்.
மேலும் ராமநாதபுரம் தொகுதியில். மீண்டும் போட்டியிடுவேனா என்பது குறித்து எனது கட்சி முடிவெடுக்க்கும். கட்சியின் கட்டளைக்கு இணங்க செயல்படுவேன். ஐக்கிய அரபு அமீரகம் மத நல்லிணக்கத்துக்கும்,மனித நேயத்திற்கும் எடுத்து காட்டாக திகழ்கிறது.இங்கு பள்ளிவாசல் கோவில் சர்ச் என அவரவர்க்கு வழிபாட்டு தலங்கள் ள்ளன.அவரவர்கள் வழிபாட்டு உரிமைகளில் யாரும் தலையிடுவதில்லை. இங்கு உள்ள மக்கள் இந்து முஸ்லிம் கிறிஸ்தவர்கள் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக உள்ளதை நேரில் காணும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த நல்லிணக்கத்தை செயல்படுத்து இந்த அரசாங்கம் மிகவும் பாராட்டுக்குறியது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment