இங்குள்ள குதா கிராமத்தில் வசிக்கும் அஹிர்வார் சமுதாயத்தைச் சேர்ந்த சில சிறுவர்கள் இன்று அருகாமையில் உள்ள குதா ஆற்றுக்கு குளிக்கச் சென்றனர். விளையாடியபடி அவர்கள் நீந்தி குளித்துக் கொண்டிருந்தபோது ஆற்றுக்கு மேலே செல்லும் உயரழுத்த மின்கம்பி அறுந்து நீரில் விழுந்தது.
1100 கிலோவாட் சக்தி கொண்ட அந்த கம்பி வழியே கடந்துச் சென்ற உயரழுத்த மின்சாரம் நீரில் பாய்ந்ததில் சுனில்(13), தீபக்(13), ப்ரிஜேந்திரா(14) மற்றும் கவுசல்(15) ஆகிய 4 சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியாகினர். அவர்கள் நால்வரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, தவறுக்கு காரணமானவர்கள் மீது உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மத்தியப் பிரதேச மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment