தமிழகத்திலிருந்து அயல்நாட்டுக்கு சென்றுள்ள தமிழர்கள் தொடர்பான கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, விழுப்புரம் உள்பட 17 மாவட்டங்களில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. எஞ்சிய 15 மாவட்டங்களில் டிசம்பர் இறுதிக்குள் கணக்கெடுப்பு நிறைவடைந்து விடும் என சென்னையில் செய்தியாளர்களிடம் கணக்கெடுப்பு திட்ட இயக்குநர் இருதயராஜன் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டத்தில் இருந்து தான் அதிகம் பேர் அயல்நாட்டுக்கு செல்கின்றனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
10ம், 12ம் வகுப்பு படித்தவர்களே வேலைக்காக அதிகம் அயல்நாட்டு செல்கின்றனர் என இருதயராஜன் கூறினார். சிங்கப்பூருக்கு 21.4%, சவுதிக்கு 21.5%, மலேஷியாவுக்கு 11.3% பேர் செல்கின்றனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது. அயல்நாட்டுக்கு வேலைக்காக கடலோர மாவட்டத்தை சேர்ந்தோர் அதிகம் பயணம் மேற்கொண்டுள்ளனர். தமிழகத்துக்கு 2013ம் ஆண்டு அயல்நாடுவாழ் தமிழர் மூலம் ரூ.60,000 கோடி வருவாய் வந்துள்ளது. மேலும் ரூ.24 லட்சம் கேரளா மக்கள் மூலம் அம்மாநிலத்துக்கு ரூ.74,803 கோடி வருவாய் வந்துள்ளது. அயல்நாடு வாழ் தமிழருக்கு உதவி செய்யவே கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது என இருதயராஜன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment