நித்தம் இரு கற்பழிப்பு, சத்தம் இல்லாமல் ஓடும் காருக்குள் பாலியல் பலாத்காரங்கள் என்ற ரீதியில் மாறிக் கொண்டிருக்கும் நாட்டின் தலைநகரான டெல்லியில் அரசு பஸ்சை ஓட்டும் முதல் பெண் டிரைவராக சரிதா என்பவர் இன்று பணியில் சேர்ந்துள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நலகொண்டா மாவட்டத்தை சேர்ந்த சரிதா இதற்கு முன்னர் டெல்லியில் டாக்சி டிரைவராக வேலை செய்து வந்தார். டெல்லி பஸ் போக்குவரத்துக் கழகம் ஒப்பந்த அடிப்படையில் டிரைவர் மற்றும் கண்டக்டர்களை வேலைக்கு எடுப்பதாக அறிந்த சரிதா, டிரைவர் வேலைக்கு மனு செய்து, இதற்கான தனி பயிற்சி பெற்று இன்று பணியில் சேர்ந்தார்.
இவர் பயிற்சியில் சேர்ந்ததை அறிந்து பல பெண்கள் கண்டக்டர் வேலைக்கு வந்ததை பெருமிதத்துடன் குறிப்பிடும் சரிதா, விவசாயியான எனது தந்தை ஒரு ஆண் குழந்தையை வளர்ப்பதுபோல் தைரியமூட்டி என்னை வளர்த்திருப்பதால் எந்த சிக்கலான சவாலையும் என்னால் துணிச்சலுடன் எதிர்கொள்ள முடியும் என்று கூறுகிறார்.
பரபரப்பு நிறைந்த டெல்லியின் சாலை போக்குவரத்தை தவிர இந்த டிரைவர் வேலையில் எந்த ஆபத்தும் இல்லை. பெண்களின் பாதுகாப்புக்காக பணியாற்றுகிறோம். அரசு வேலையில் இருக்கிறோம் என்ற மனநிறைவில் அந்த சிக்கலை பற்றி எல்லாம் நான் கவலைப்படவில்லை என சரிதா தெரிவித்தார்.
No comments:
Post a Comment