அதிரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர மருத்துவ சேவை கேட்டு வெளிநாடு வாழ் அதிரை சொந்தங்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு அன்பான வேண்டுகோள்:
நமதூரில் ஒரு அரசு மருத்துவமனையும் 8 தனியார் மருத்துவர்கள் இருந்தும் இவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பணி செய்கின்றனர், இத்தனை டாக்டர்கள் இருந்தும் இரவு நேரங்களில் ஏற்படுகின்ற அவசர சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைக்கோ அல்லது தனியார் மருத்துவர்களையோ நேரடியாக சென்று அவர்களின் வீடுகளின் கதவுகளை தட்டினாலும் ஒரு சிலரை தவிர யாரும் வந்து பதில் தருவது கிடையாது. பகல் மற்றும் இரவு நேரங்களில் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மருத்துவ முதலுதவி என்பது வெறும் கேள்வி குறியாகவே இருந்து வருகின்றது, வீடுகளில் இயற்கையாக மரணமடைபவர்களை நாடிபிடித்து பார்த்து சொல்வதற்கு கூட நமதூர் மருத்துவர்களுக்கு நேரம் கிடைப்பது இல்லை நாடிபிடித்து சொல்வதற்கு, வந்து செல்வதற்கு வாகனமும் அவருக்கான ஊதியமும் கொடுத்து அழைத்தாலும் யாரும் வருவது கிடையாது. பாதிக்கப்பட்டோரை நீண்ட தூரத்தில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லும் போதே உயிர் இழப்புகளும் ஏற்பட்டு விடுகின்றது. இது தான் அதிரையின் இன்றைய நிலை.
இது போன்ற சிரமங்களை கருத்தில் கொண்டு அதிரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர பணியை தொடரவும், கூடுதல் மருத்துவர்கள் நியமிக்கவும் தேவையான முதலுதவி உபகரணங்கள் வழங்க உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனி நபர் சமூக ஆர்வலர் ஒருவர் அபுதாபியிலிருந்து தமிழக முதல்வர், சம்பந்தபட்ட துறை அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கும் முதலில் மின்னஞ்சல் மூலம் மேற்காணும் கோரிக்கை மனு அனுப்பட்டது அதற்கு எந்த பதிலும் வராத நிலையில் ஒரு மாதத்திற்கு பிறகு அவை அனைத்தையும் பதிவு தபால் மூலமும் தொடர்ந்து கோரிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கும் இன்று வரை பதில் இல்லை அடுத்த கட்டமாக தகவல் அறியும் உரிமைச்சட்டதின் கீழ் தகவல் கோர உள்ளோம். இன்ஷா அல்லாஹ் அவைகள் அனைத்தும் உங்கள் பார்வைக்கு தருகிறோம். இதை தனி நபர் முயற்சி செய்வதை விட இப்படி கூட்டு முயற்சி செய்தால் என்ன என்று என் மனதில் தோன்றியது.
வெளிநாடு வாழ் அதிரையர்கள் அனைவரும் யு.ஏ.யி, சவூதி, கத்தார், குவைத், மஸ்கட், அமெரிக்கா, ஜப்பான், லண்டன், போன்ற நாடுகளில் வாழும் நம் சக அதிரை சகோதரர்களிடம் கையெழுத்து வேட்டை நடத்தி அந்தந்த நாடுகளில் உள்ள இந்தியன் எம்பஸி மூலம் தமிழக முதல்வர், சம்பந்தபட்ட துறை அலுவலகம், மாவட்ட ஆட்சியர் போன்றவர்களுக்கு வெளிநாடு வாழ் அதிரையர்கள் சார்பாக ஒரு கோரிக்கை மனு அனுப்பி வைத்தால் இன்னும் கொஞ்சம் வீரியமாக இருக்குமென்று நான் கருதுகிறேன், ஒவ்வொரு மஹல்லாவாசிகளிடமும் அந்தந்த மஹல்லா நிர்வாகிகள் பொறுப்பேற்று கையெழுத்து வேட்டை நடத்தி ஒன்றிணைந்த குழுவாக சென்று இந்தியன் எம்பஸியில் கொடுக்க முன்வர வேண்டுமென்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
இது தொடர்பான ஆலோசணைகளை பகிர்ந்து கொள்ள கீழ்க்காணும் எண்ணில் தினமும் மஃரிப் தொழுகைக்குப் பின் அல்லது வெள்ளிக்கிழமைகளில் தொடர்பு கொண்டு செய்திகளை பறிமாறிக் கொள்ள வேண்டுகிறேன்.
அதிரை 'அல்மாஸ்' என்கிற
K.M.N. முகமது மாலிக்
அபுதாபி
050 7914780
அதிரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர மருத்துவ சேவை கேட்டு பெயர் சொல்ல விரும்பாத மேலத்தெருவை சேர்ந்த இளைஞர் ஒருவர் அனுப்பி வைத்த கோரிக்கை மனுவின் விவரங்கள்:
No comments:
Post a Comment