தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜ ராஜேஸ்வரி என்பவர் நியூயார்க் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளார். சென்னையில் பிறந்து தனது 16வது வயதில் அமெரிக்காவுக்கு சென்றவரான ராஜ ராஜேஸ்வரி, நியூயார்க் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். தற்போது 43 வயதாகும் ராஜ ராஜேஸ்வரி இதற்கு முன்பு ரிச்மோண்ட் கவுண்டி மாவட்டத்தில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக 16 ஆண்டுகள் பணி புரிந்தார். அவரை நியூயார்க் நகர் மேயர் பில் டி பால்சியோ, நியூயார்க் நகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக நியமித்துள்ளார்.
நீதிபதியாக தான் பொறுப்பேற்றது குறித்து அவர் கூறுகையில், எனக்கு இப்பதவி அளிக்கப்பட்டுள்ளதை கனவு போன்று உணர்கிறேன். இது நான் கற்பனை செய்ததற்கும் மேலானது. எனெனில் நான் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த பெண். இப்பதவியை தந்ததற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நடைபெறும் இந்திய கலாச்சார நிகழ்வுகள் மற்றும் கோவில் திருவிழாக்களில் பங்கேற்றுள்ள ராஜேஸ்வரி பரத நாட்டியம் மற்றம் குச்சிப்புடி நடனங்களை அரங்கேற்றம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment