பழைய கஞ்சி, நேத்து வச்சு சுண்ட வைத்த மீன் குழம்பு அப்படியே கொஞ்சம் வத்தல் சின்ன வெங்காயம், தயிர் ஆஹா இதுதான் இறைவனின் அருட்கொடை .
கஞ்சியை சாதாரணமாக நினச்சுடாதீங்க:
பழைய சோறு என்றும், கஞ்சி என்றும் நாமெல்லாம் உதாசீதனப்படுத்திய அந்த மகத்தான உணவின் மகத்துவத்தையும், பல்வேறு விதமான பயன்பாடுகளையும் அமெரிக்க ஊட்டச்சத்து விஞ்ஞானிகள் ஆய்வு மூலம் கண்டுபிடித்துள்ளனர்.
தென் இந்தியர்கள் காலை உணவாக பயன்படுத்தும் பழைய சோற்றில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான இவ்வளவு சத்துகள் அடங்கி உள்ளனவா? என்று வியந்து போயிருக்கிறார்கள்.
பழைய சோறு, காலை உணவுக்கு மிகவும் பொருத்தமான உணவு. மற்ற உணவு பதார்த்தங்களில் இல்லாத வகையில் பழைய சோற்றில் அரிய வைட்டமின்களான பி–6, பி–12 ஆகியவை மிகுதியாக காணப்படுகின்றன. பழைய சோற்றில் உருவாகும் கோடிக் கணக்கான நல்லதன்மை கொண்ட பாக்டீரியாக்கள் உணவு செரிமானத்திற்கு பெரிதும் உதவும். அதில் நோய் எதிர்ப்பு மற்றும் நோய் தடுப்புக்கான காரணீகள் அதிகமாக உள்ளன.
பழைய கஞ்சி சாப்பிடுவதால் சிறுகுடலில் உருவாகும் பாக்டீரியாக்கள் உடல் உள் உறுப்புகளை பாதுகாப்பதுடன் அவற்றை நோய் உண்டாக்கும் கிருமிகளை எதிர்க்கும் வகையில் எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்கின்றன.
காலை உணவாக சாப்பிடும் பழைய கஞ்சி எளிதில் ஜீரணமாகிவிடும். அது வயது முதிர்ந்த தோற்றத்தையும், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களையும் நீக்கும். ஜீரணம் தொடர்பான எந்த பிரச்சனையும் வராது. சூடு தணிந்து உடம்பு குளிர்ச்சியாக இருக்கும். பழைய சோறு நார்ச்சத்து கொண்டதாக இருப்பதால் மலச்சிக்கல் பறந்துவிடும். உடல் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும்.
ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் பழைய சோறுக்கு உண்டு. உடலில் சோர்வே ஏற்படாது. பழைய சோறு சாப்பிட்டால் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம். சோர்வு அண்டாது. அனைத்து விதமான ஒவ்வாமைகளும், தோல் சம்பந்தப்பட்ட நோய்களும் காணாமல் போய்விடும். எந்தவித வயிற்று புண்ணும் (அல்சர்) நெருங்காது. உடல் இளமையாகவும், தோற்றப்பொலிவுடனும் இருக்குமாம்.
அதனால்தான் நம்ம விவசாய பெருமக்கள் ஒல்லியாக இருந்தாலும் நல்ல ஆரோக்கியமாக நோய் நொடியின்றி நல்லா இருக்காகெ போல.
நன்றி : வலையுகம்
No comments:
Post a Comment