டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த வாரம் சுங்க அதிகாரிகள் 2 பயணிகளிடம் இருந்து ரூ.5.5 கோடி மதிப்புள்ள 21 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்
கடந்த வாரம் ஏப்ரல் 9 ந்தேதி தைவான் விமான நிறுவனம் மூலம் பாங்காக்கில் இருந்து வந்த ஒரு பயணியை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர் மறைத்து வைத்து இருந்த ரூ.1.95 கோடி மதிப்புள்ள 8 கிலோ தங்கத்தை கைப்பற்றினர். அதே நேரம் அதே விமானத்தில் வந்த மேலும் 3 பயணிகளை சோதனை செய்த போது அவர்களிடம் இருந்து ரூ.3.5 கோடி மதிப்புள்ள 13 கிலோ தங்கம் கைபற்றபட்டது. என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து வியாழன் வெள்ளியில் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு பயணியிடம் இருந்து 25 தங்க பிஸ்கட் 3 கிலோ தங்கம் கைபற்றபட்டது.
கடத்தல் காரரகள் தங்கத்தை கடத்துபவர்களுக்கு ஒரு கிலோவுக்கு ரூ 50 ஆயிரம் கொடுக்கிறார்கள். ஆனால் அவர்கள் ரூ. 2 முதல் 3 லட்சம் வரை சம்பாதிப்பார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment