அரசு என்ற அமைப்பின் இலக்கணங்கள், செயல்பாடுகள், அடிப்படைக் கட்டுமானங்கள் மற்றும் அது இயங்கும் விதம் குறித்து பகுப்பாய்வு செய்யும் சமூக அறிவியலின் ஒரு பிரிவே அரசியல் அறிவியல் (Political Science) அரசியல் அறிவியல் குறித்து சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பே பிளாட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற அறிஞர்கள் நூல்களை எழுதியிருக்கிறார்கள். அண்மைக்காலமாக மாணவர்கள் மத்தியில் பெரிதும் கவனம் பெற்று வரும் இத்துறையில் உள்ள படிப்புகள், வேலைவாய்ப்புகள், இத்துறையில் சாதித்த சாதனையாளர்கள், இந்தத் துறையில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்கள் பற்றி விரிவாக விளக்குகிறார் ‘இன்ஸ்பையர் ஃபெல்லோ’ முனைவர் உதயகுமார்.
‘‘அரசியலமைப்பு, அரசியலமைப்புச் சட்டம், அரசியல்வாதிகள், அவர்களின் பங்களிப்பு, சட்டம் இயற்றுபவர்கள், சட்டத்தை நிலை நாட்டுபவர்கள், அந்நிய நாடுகளுடனான தொடர்பு உள்ளிட்ட நாட்டின் நிர்வாக அமைப்பைப் பற்றி முற்றுமுழுதாக படித்தறிய உதவும் துறையே அரசியல் அறிவியல். சமூகத்தைப் பகுத்துப் பார்க்கும் அறிவு, நேர்மறை அரசியல், உண்மை நிலையை அறிதல் போன்ற பல தன்மைகளை அரசியல் அறிவியல் படிப்பதன் மூலம் மேம்படுத்திக் கொள்ளமுடியும். இத்துறை நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானதாகும். அரசியல், சமூக ஆர்வம் கொண்ட மாணவர்கள் இப்பிரிவை தாராளமாக தேர்வு செய்யலாம். ஆய்வு மற்றும் பொறுப்புணர்வு மிக்க இத்துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உண்டு.
அரசியல் அறிவியல் துறை சார்ந்த பிரிவுகள்/படிப்புகள்
* Political Theory – அரசியல் கருத்தியல்
* Comparative Politics – ஒப்பீட்டு அரசியல்
* Public Administration – பொது மேலாண்மை
* International Relations -பன்னாட்டுத் தொடர்புகள்
* Public Law பொது விதி
* Political Methodology -அரசியல் ஆய்வு முறையியல்
* Positivism – நேர்மறையியல்
* Survey research – களப்பணி ஆய்வு
* Statistical Analysis- புள்ளியியல் பகுப்பாய்வு
* Foreign policy – வெளிநாட்டுக் கொள்கை.
இப்பிரிவுகளில் படிக்கலாம்
BA., M.A., M.Phil., Ph.D., D.Phil., Diploma in Political Science
அரசியல் அறிவியல் துறையைக் கொண்ட இந்தியாவிலுள்ள சிறந்த கல்வி நிறுவனங்கள் சில…
* மாநிலக் கல்லூரி, சென்னை
* சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை
* யுனிவர்சிட்டி ஆஃப் ஐதராபாத், தெலுங்கானா
* யுனிவர்சிட்டி ஆஃப் டெல்லி, புதுடெல்லி
* குஜராத் யுனிவர்சிட்டி, குஜராத்
* பஞ்சாப் யுனிவர்சிட்டி, சண்டிகர்
* ஹிமாச்சல் பிரதேஷ் யுனிவர்சிட்டி, இமாசலப்பிரதேசம்
* கோவா யுனிவர்சிட்டி, கோவா
* பனாரஸ் ஹிந்து யுனிவர்சிட்டி, வாரணாசி
* ஜம்மு யுனிவர்சிட்டி, ஜம்மு
அரசியல் அறிவியல் துறையைக் கொண்ட உலக அளவிலான சிறந்த கல்வி நிறுவனங்கள் சில…
* ஸ்டான்போர்டு யுனிவர்சிட்டி, அமெரிக்கா (www.stanford.edu)
* யுனிவர்சிட்டி ஆஃப் வாஷிங்டன், அமெரிக்கா (www.washington.edu)
* கொலம்பியா யுனிவர்சிட்டி, அமெரிக்கா (www.columbia.edu)
* ட்யூக் யுனிவர்சிட்டி, அமெரிக்கா (www.duke.edu)
* யுனிவர்சிட்டி ஆஃப் ஹவாய், அமெரிக்கா (www.hawaii.edu)
* நாட்டிங்ஹாம் யுனிவர்சிட்டி, இங்கிலாந்து (www.ntu.ac.uk)
* யுனிவர்சிட்டி ஆஃப் கலிபோர்னியா, அமெரிக்கா (www.berkeley.edu)
* லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் அண்டு பொலிடிக்கல் சயின்ஸ், இங்கிலாந்து (www.lse.ac.uk)
* யுனிவர்சிட்டி ஆஃப் ஓரிகான், அமெரிக்கா (www.uoregon.edu)
* ஜான் ஹாப்கின்ஸ் யுனிவர்சிட்டி, அமெரிக்கா (www.jhu.edu)
அரசியல் அறிவியல் துறை மாணவர்களை உற்சாகப்படுத்தவும், அவர்களின் ஆய்வுகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தரவும் உருவாக்கப்பட்டுள்ள அமைப்புகள் சில…
* இன்டர்நேஷனல் பொலிடிக்கல் சயின்ஸ் அசோசியேஷன், அமெரிக்கா
* யூரோப்பியன் கன்சார்சியம் ஃபார் பொலிடிக்கல் ரிசர்ச், இங்கிலாந்து
* அமெரிக்கன் பொலிடிக்கல் சயின்ஸ் அசோசியேஷன், அமெரிக்கா
* மிட்வெஸ்ட் பொலிடிக்கல் சயின்ஸ் அசோசியேஷன், அமெரிக்கா
* சதர்ன் பொலிடிக்கல் சயின்ஸ் அசோசியேஷன், அமெரிக்கா.
* பொலிடிக்கல் சயின்ஸ் அசோசியேஷன், இங்கிலாந்து
* இண்டியன் பொலிடிக்கல் சயின்ஸ் அசோசியேஷன், இந்தியா
* கனடியன் பொலிடிக்கல் சயின்ஸ் அசோசியேஷன், கனடா
* நியூ இங்லாண்ட் பொலிடிக்கல் சயின்ஸ் அசோசியேஷன், இங்கிலாந்து
* அலபாமா பொலிடிக்கல் சயின்ஸ் அசோசியேஷன், அமெரிக்கா
அரசியல் அறிவியல் துறையில் சாதிப்பவர்களுக்கு வழங்கப்படும் பரிசுகள்/ பதக்கங்கள்/ விருதுகள் சில…
* ப்ரியன் ஃபேர்ரி ப்ரைஸ், பிரிட்டிஷ் அகாடமி, இங்கிலாந்து
* ஜோகன் ஸ்கைட் ப்ரைஸ், ஸ்வீடன்
* இன்ஃபோஸிஸ் ப்ரைஸ், இந்தியா
* பி.எச்.யூ மெடல், வாரணாசி இந்து பல்கலைக்கழகம், இந்தியா
* யுனிவர்சிட்டி அவார்டு, ஒட்டாவா யுனிவர்சிட்டி, கனடா
* பை, சிக்மா, ஆல்பா அவார்டு, அமெரிக்கா
* சார்லஸ் இ-மெர்ரியம் அவார்டு, அமெரிக்கா
* நேஷனல் ஹியுமானிட்டிஸ் மெடல், இங்கிலாந்து
* தி க்ராம்ப்டன் கோல்டு மெடல், அமெரிக்கா
* ஏ.எம்.டூரிங் அவார்டு, அமெரிக்கா
அரசியல் அறிவியல் துறை பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்கள்…
* மினிஸ்ட்ரி ஆஃப் சோஷியல் ஜஸ்டிஸ் அண்டு எம்பவர்மென்ட், மத்திய அரசு
* மினிஸ்ட்ரி ஆஃப் லா, மத்திய அரசு.
* யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன், புதுடெல்லி
* மாநில அரசுப்பணியாளர் தேர்வாணையங்கள்
* கல்வி நிறுவனங்கள் (கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள்)
* பன்னாட்டு கல்வி நிறுவனங்கள்
* மாநில மற்றும் தேசிய அரசியல் கட்சி அலுவலகங்கள்
* மாநில மற்றும் தேசிய தேர்தல் ஆணையங்கள்
* மினிஸ்ட்ரி ஆஃப் ஹியூமன் ரிசோர்ஸ் டெவலப்மென்ட், மத்திய அரசு
* மினிஸ்ட்ரி ஆஃப் ட்ரைபல் அஃபையர்ஸ், மத்திய அரசு
No comments:
Post a Comment