மேற்குவங்க மாநிலத்தில் உள்ள துப்கவுரி பகுதியில் தந்தை, மாமன், சகோதரனால் 2 ஆண்டுகளாக ஒரு இளம் பெண் சீரழிக்கப்பட்டு வந்த கொடூரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
உலகத்தில் இப்படியும் நடக்குமா என்று எல்லோராலும் பதறக்கூடிய கொடூர சம்பவம் ஒன்று மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. ஒரு 16 வயது இளம் பெண்ணை, அவளது தந்தை, சகோதரன் மற்றும் மாமனும் சேர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து, போலீசார் அந்த கொடூரர்கள் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள துப்கவுரி பகுதியில், கடந்த வியாழக்கிழமை 16 வயது இளம் பெண் ஒருவர் தன் பள்ளி ஆசிரியர் ஒருவரிடம் தான் அனுபவித்து வரும் கொடூரத்தை கூறி இருக்கிறார். அதை கேட்டு பதறிப்போன அந்த ஆசிரியர் இந்த தகவலை பள்ளியில் உள்ள மற்ற ஆசிரியர்களிடம் தெரிவித்து இருக்கிறார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமையன்று அந்தப் பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று புகார் அளிக்க வைத்துள்ளனர்.
போலீசாரிடம் அந்த பெண் அளித்துள்ள வாக்குமூலத்தில், ”என் தந்தை, தாய்மாமன் மற்றும் சகோதரன் ஆகிய மூவரும் கடந்த 2 வருடங்களாக என்னை பாலியல் பலாத்காரம் செய்து வந்தனர். இதில் நான், 2 முறை கர்ப்பமடைந்து அதை கலைத்தும் இருக்கிறேன். இவர்களின் இந்த தொல்லையால் மன உளைச்சல் தாங்க முடியாமல் 4 முறை தற்கொலைக்கு கூட முயன்றேன்.
நான், முதன் முதலாக என் குடும்பத்தினராலே சீரழிக்கப்பட்டதை என் தாயிடம் சொல்லி அழுதேன். ஆனால் அதற்கு என் தாய், ”அவர்கள் ஒன்றும் அந்நியர்கள் இல்லை. அவர்கள் உன் உறவினர்கள் தான். அதனால் நீ பொறுத்துக்கொள்” என்று என்னை தான் சமாதானம் செய்தார். என்னிடம் தவறாக நடந்து கொண்ட அவர்களை தட்டி கேட்க வில்லை. அதனால், அவர்களின் கொடுமையில் இருந்து நீங்கள் தான் என்னை காப்பாற்ற வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.
புகாரை பெற்று கொண்ட காவல் துறையினர் கல் நெஞ்சம் படைத்த அந்த கொடூரர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்த பெண்ணிற்கு நேர்ந்த கொடூர சம்பவத்திற்கு உடந்தையாக இருந்து தலைமறைவாகி உள்ள அந்தப் பெண்ணின் தாயாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment