அமெரிக்காவின் நியூவார்க் விமான நிலையத்தில் இருந்து மும்பை கிளம்பிய ஏர் இந்தியா விமானம் என்ஜின் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஏர் இந்தியா விமானம் போயிங் 777-300 இஆர் 250 பேருடன் அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தில் உள்ள நியூவார்க் நகரில் இருந்து மும்பை கிளம்பியது. விமானம் கிளம்பிய 2 மணிநேரத்தில் என்ஜின் ஒன்றில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானம் நியூவார்க் விமான நிலையத்திற்கு திரும்பிச் சென்று அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இது குறித்து ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,
என்ஜின் கோளாறு காரணமாக ஏர் இந்தியா விமானம் நியூவார்க் விமான நிலையத்திற்கு திரும்பிச் சென்று அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் 29 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கையில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டு விமானம் அதிர்ந்தது. தரையிறக்கப்பட்ட பிறகு பார்த்தபோது என்ஜின் பிளேட் உடைந்திருந்தது தெரிய வந்தது. விமானியின் புத்திசாலித்தனத்தால் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. அந்த விமானத்தில் இருந்தவர்கள் வேறு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர் என்றார். விமானத்தை தரையிறக்கும் முன்பு விமானி 60 டன் எரிபொருளை வெளியேறவிட்டு பிறகு பத்திரமாக விமானத்தை தரையிறக்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment