வேளாண்மைத்துறை பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் சென்னையில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி இன்று பிற்பகலில் நெல்லையில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி செந்தில் உத்தரவிட்டார். டார். கடந்த பிப்ரவரி 20ஆம் தேதிமுத்துக்குமாரசாமி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வேளாண் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கடுமையாக அழுத்தம் தந்ததாகவும், இதனையடுத்து மனஉளைச்சலுக்கு ஆளான அவர் தற்கொலை முடிவை நாடியதாக பெரும் சர்ச்சை வெடித்தது.
இதையடுத்து அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் வசம் இருந்த அண்ணா தி.மு.க. கட்சிப் பதவிகள் உடனடியாக பறிக்கப்பட்டன. இதன் பின்னணியில் மேலும் சில ஆளும் கட்சிப் பிரமுகர்கள் இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் அமைச்சர் பதவியும் பறிபோனது. மேலும் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மற்றப்பட்டது. எதிர்க்கட்சிகள் வேளாண் அதிகாரி தற்கொலைக்கு காரணம் அக்ரி கிருஷ்ண மூர்த்தி தான் என்றும் அவரைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டம் நடத்தி வந்தனர். இதனிடையே முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகும்படி, முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு சிபிசிஐடி காவல்துறையினர் சம்மன் அனுப்பினர். இந்நிலையில், நேற்றிரவு 10 மணியளவில் சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு அக்ரி கிருஷ்ணமூர்த்தி சென்றார்.
வேளாண் பொறியாளர் முத்துக்குமாரசாமி மரணம் குறித்தும் பல்வேறு விதமான கேள்விகள் எழுப்பியதாகத் தெரிகிறது. ஓட்டுநர் நியமனம் தொடர்பாக, செயற்பொறியாளர் முத்துகுமாரசாமிக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதாக கூறப்படுவது குறித்தும் அக்ரி கிருஷ்ணமூர்த்தியிடம் போலீசார் விசாரித்தனர். இரவு முழுவதும் நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணிக்கு அவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இதனை சிபிசிஐடி போலீஸ் ஐஜி மகேஷ் தெரிவித்தார். இதேபோல் அக்ரி கிருஷ்ணமூர்த்தியுடன் வேளாண் பொறியாளர் செந்திலும் கைது செய்யப்பட்டார். சென்னையில் கைது செய்யப்பட்ட அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் செந்தில் நெல்லை நீதிபதி செந்தில்குமார் முன்னிலையில் இன்று பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது அக்ரி கிருஷ்ணமூர்த்தியை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கபட்டுள்ளார். அவருடன் வேளாண் பொறியாளர் செந்திலும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
No comments:
Post a Comment