இயற்கையை நாடு! செயற்கையை விடு! என்பதுதான் இனி எதிர்கால அறிவியலின் தாரக முழக்கமாக விளங்கப் போகிறது. இயற்கையை நாடி அதில் பலனடையப் போகும் மனிதகுலத்திற்கு, நின்று, நிலைபெற்று ஒளியையும், வெப்பத்தையும் தரும் சூரியனே முதலிடம் பெறவுள்ளது.
சூரியகாந்தி மலரைப் போல் இனி ஒட்டுமொத்த மனித குலமும் சூரியன் பக்கம்தான் திரும்பப்போகிறோம்.
உலகின் என்னதான் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவற்றை இயக்குவதற்கு மின்னாற்றல் தேவை. இந்த மின்னாற்றலை யுரேனியம், தோரியம், நிலக்கரி, காற்று, நீர்வீழ்ச்சி எனப் பலவற்றைப் பயன்படுத்தி ஆற்றலை உற்பத்தி செய்கிறோம். இந்த உற்பத்திக்கான செலவினங்கள் நாளுக்கு நாள் கூடுகின்றன. தேவை அதிகரிப்பால் உரிய வாறு உற்பத்தி செய்ய இயலாமல் பல நாடுகளும் திணறுகின்றன. இதனால் வேண்டத்தகாத சச்சரவுகளும், சுற்றுச்சூழல் மாசுபடுவதும் தவிர்க்க இயலாததாகிவிட்டது. ஒரு சதுர மீட்டர் பரப்புள்ள சோலார் செல்கள் வாயிலாக ஒருநாளைக்கு சுமார் ஆறு யூனிட் மின்சாரம் தயாரிக்கலாம் என்று சொல்கின்றனர். ஆக, நம் நாட்டில் ஏகப்பட்ட ஹெக்டேர் நிலங்களில், விவசாய நிலங்களில், வீட்டின் கூறைகள் மீதெல்லாம், தொழிற்சாலைகள் கட்டடங்களில் எல்லாம் இந்த சோலார் செல்களை வைத்தால் ஏகப்பட்ட மின்சாரம் கிட்டும். சூரிய ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்தலாம்.
மழை பெய்து அணைகள் நிரம்பினால்தான் புனல் மின் உற்பத்தி, போதிய சாம்பல் திறனுள்ள நிலக்கரி உலைக்களத்தில் பயன்படுத்தப்பட்டால்தான் அனல் மின் உற்பத்தி, அணு உலைகளில் போதிய அளவு செறிவூட்டிய அணு மூலப்பொருட்கள்இருந்தால்தான் அணு மின்சாரம், காற்றாலை குறைந்த விலையில் தயாரித்து பரவலாக காற்று வீசும் பகுதிகளில் நட்டால்தான் காற்றலை மின்சாரம். இவற்றில் ஒவ்வொன்றிலும் சிக்கல் உண்டு. கையடக்கமான சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் கருவிகள் தற்போதைய டிஷ் ஆன்டெனா போல் நாடெங்கும் வீடுகளில் கட்டாயம் தேசிய அளவிலான திட்டம் தீட்டி பயன்படுத்த தொடங்கினால் மின் தொடர்பான சிக்கல் தீரும். மேலும் பிறவற்றின் வாயிலாக மின் தயாரிப்புச் செலவைவிட இந்த நுட்பத்தில் தயாரிப்புச் செலவு குறைவுதான் என்பது நம் இளைஞர்கள் கட்டாயம் அறிவது நல்லது.
ஏனெனில் இந்த நுட்பதைப் பயன்படுத்தி அமோக அளவு வெற்றி பெற்ற நாடுகளில் ஸ்பெயின் இன்றும் முன்னிலை வகிக்கிறது. அங்கு அவர்களின் மொத்த மின் தேவையில் 12 சதவீத மின்சாரம் சூரிய ஒளி மின்சாரம்தான் பயன்படுத்தப்படுகிறது. உலகின் உச்சாணியில் விளங்கிய ஸ்பெயின் என்கிற புகழ் மிக்க குட்டி நாடு பல நாட்டுக்கும் சூரிய ஒளி மின் உற்பத்தியில் நிறைவு பெற்று முன்னிலை வகிக்கிறது. சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பதால் எந்த வகையிலும் நம் சுற்றுச்சூழல் துளிக் கூட மாசடையாது என்பதே! அதனால் இதனை கிரீன் எனர்ஜி என்கிறார்கள். பிரான்ஸ், போர்ச்சுக்கல், இத்தாலி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் அனைத்தும் சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பதில் முழு மூச்சாகத் திட்டமிட்டு வருகின்றன. சூரிய ஒளியைப் பெற்று சோலார் செல்வழியில் அதனை மின்கலத்தில் சேமித்துப் பயன்படுத்தலாம். சூரிய ஒளி மறைவுக்குப்பின் அதை மின்சாரத்தை உமிழும் கலமாகவும் மாற்றலாம். ஆக, இதுபோன்ற தொழில் நுட்பங்களை மேலும் பன்மடங்கு ஆழமாக பி.இ பொறியியல் பயின்ற மாணவர்கள், இளைஞர்கள் முயன்றால் இதில் புதிய, எளிய வழிமுறைகளையும் கண்டறியலாம்.
குறிப்பாக பொறியியலில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக், சுற்றுச்சூழல் பொறியியல், பவர் என்ஜினியரிங் முதலானதொடர்புள்ள துறைகளைப் பயின்றவர்கள், சூரிய ஒளி தொடர்பான மின் உற்பத்தியில் அதற்கான கருவிகளில் மாற்றம் கண்டுள்ள நவீன, எளிய கருவிகள் தொடர்பான ஆய்வை மேற்கொண்டு, உற்பத்தி செய்து மக்களுக்கு வழங்க முன்வர வேண்டும்.
ஏற்கனவே நம் நாட்டில் இதற்கான சாதனங்கள் தயாரிப்பும், உற்பத்தியும், விற்பனையும் நடந்துவருகிறது. இவைகளைக் கண்டு ஆய்ந்து மேலும் புதிய புதிய உத்திகளைப் பயன்படுத்தி அவைகள் சாமானியர்களும் வாங்கி வீட்டு உபயோகப் பொருட்களைப் போல் பயன்படுத்திட தயாரித்து வழங்க இளைஞர்கள் முன் முயற்சி எடுக்க வேண்டும். இவைகளை தனியாகச் செய்வதைவிட பொறியியல் படித்த இளைஞர்கள் கூட்டு முயற்சியாக இணைந்து மேற்கொண்டால் சிறந்தது. ஷிSOLAR ENERGY DIPLOMA COURSE - தகுதி 8 ஆவது தேர்ச்சி போதுமானது.
கற்றுத் தரும் இடம் : NATIONAL OPEN SCHOOL - NEW DELHI, HYDERABAD, KOLKATA மேலும் விவரங்களுக்கு : Website : www.bios.ac.in / www.mnes.bic.in /www.cwet.tn.nic.in
நன்றி : சமூகநீதி
No comments:
Post a Comment