இஸ்லமாபாத்,
மரண தண்டனை கைதிகள் 12 பேரை நேற்று பாகிஸ்தான் தூக்கிலிட்ட நிலையில், இன்று மேலும் 9 பேரை தூக்கிலிட்டுள்ளது.
பாகிஸ்தானில் மரண தண்டனையை எதிர்நோக்கி சுமார் 8 ஆயிரம் கைதிகள் சிறைகளில் காத்திருக்கின்றனர். கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தூக்கு தண்டனையை அந்நாட்டு அரசு நிறுத்தி வைத்திருந்தது. பெஷாவர் நகரில் உள்ள ராணுவ பள்ளிக்கூடத்தின் மீது கடந்த ஆண்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் இருந்து தீவிரவாதிகள் மற்றும் கொடுஞ்செயலில் ஈடுபட்டவர்களுக்கு தூக்கு தண்டனையை கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி முதல் மீண்டும் நிறைவேற்றி வருகிறது.
இந்த வகையில், நேற்று காலை கராச்சி உட்பட ஆறு நகரங்களின் முக்கிய சிறைகளில் இருந்த 12 மரண தண்டனை கைதிகள் தூக்கிலிடப்பட்டனர். இதனையடுத்து, இன்றும் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள லாகூர், பைசலாபாத், ராவல்பிண்டி, ஜங், மியான்வாலி மற்றும் அட்டோக் ஆகிய வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த மேலும் 9 கைதிகள் தூக்கிலிடப்பட்டனர்.
பாகிஸ்தானில் மீண்டும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதில் இருந்து இன்றுவரை 48 கைதிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment