சென்னையில் வார்டு வாரியாக டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்த பாமக திட்டமிட்டு உத்தி வகுத்து வருகிறதாம். பாமக புதிய நிர்வாகிகளின் செயல்திட்டம் பற்றிய ஆலோசனை கூட்டம் சென்னையில் இன்று கட்சி துணை பொது செயலாளர் ஏ.கே.மூர்த்தி தலைமையில் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் மதுக் கடைகளுக்கு எதிரான போராட்டம் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது. அதன்படி கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு தலா ஒரு படிவம் வழங்கப்பட்டுள்ளது. அதில் அவர்களது பொறுப்பில் உள்ள வார்டுகளின் மக்கள் தொகை, வாக்காளர் எண்ணிக்கை, கோவில், பள்ளிகள் மற்றும் பொது மக்களுக்கு இடையூறாக இருக்கும் மதுக்கடைகள் பற்றிய விவரங்கள் சேரிக்கப்படுகிறது. இந்த விவரங்கள் சேகரிக்கப்பட்டதும் மதுக்கடைகளை மூட சென்னை முழுவதும் வார்டு வாரியாக மக்களை திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனராம்.. முழுவிவரமும் சேகரி்க்கப்பட்ட பின்னர் போராட்டம் குறித்த அறிவிப்பை பாமக வெளியிடுமாம்.
No comments:
Post a Comment