அமெரிக்காவின் ப்ரூக்ளின் நகரில் உள்ள ஒரு வீட்டில் நடந்த பயங்கர தீவிபத்தில் 7 சிறார்கள் உயிரோடு கருகிப் பலியானார்கள். சிறார்களின் தாயார் மற்றும் 15 வயது சகோதரி மட்டும் உயிர் பிழைத்தனர். மின்சார அடுப்பில் சாப்பாட்டை சுட வைத்து விட்டு மாடியில் குடும்பத்தினர் இருந்தபோது இந்தத் தீவிபத்து ஏற்பட்டு பெரும் அசம்பாவிதம் நடந்து விட்டது.
யூத குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இவர்கள். சம்பவத்தன்று இரவு மின்சார அடுப்பு உருகி, வெடித்து பயங்கர தீவிபத்து ஏற்பட்டு விட்டது. அதில் கிளம்பிய தீ அறைக்குள் பரவி வீடு முழுக்க வியாபித்துள்ளது. அதில் மேல் மாடியில் தூங்கிக் கொண்டிருந்த 7 சிறார்களும் பரிதாபமாக தீயில் சிக்கிக் கொண்டனர். அவர்களுக்கு 5 முதல் 16 வயது வரையில் இருக்கும். அவர்களின் தாயார் மற்றும் 15 வயது சகோதரி ஆகியோர் புகையில் சிக்கி 2வது மாடி ஜன்னல் வழியாக கீழே குதித்து உயிர் தப்பினர். விபத்தில் உயிர் தப்பிய தாயாரின் பெயர் கெயில் சசூன். இவருக்கு வயது 45 ஆகும். உயிரிழந்த 7 சிறார்களில் 4 பேர் சிறுமிகள் ஆவர். விபத்தின் போது கெயிலின் கணவர் ஊரில் இல்லை. வெளியூர் போயிருந்தார்.
No comments:
Post a Comment