மேலே கெட்கப்பட்ட தகுதியுடைய ஆர்வமுள்ள இளைஞர்கள் இதில் பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மத்தியபிரதேசம், ஜபல்பூரில் உள்ள ராணுவ வாகனங்கள் உற்பத்தி ஆலையில் காலியாக உள்ள 32 குருப் 'சி' பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
1. ஸ்டோர் கீப்பர்:
23 இடங்கள். (பொது - 9, எஸ்சி - 4, எஸ்டி - 7, ஒபிசி - 3). இவற்றில் 2 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கும், ஒரு இடம் மாற்றுத்திறனாளிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
சம்பளம்:
ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900.
வயது:
27.3.2015 தேதிப்படி 27க்குள்.
தகுதி:
பிளஸ் 2 மற்றும் கம்ப்யூட்டரில் 'ஓ' லெவல் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
2. சிவிலியன் மோட்டார் டிரைவர்:
1 (பொது).
சம்பளம்:
ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900.
வயது:
27.3.2015 தேதிப்படி 32க்குள்.
தகுதி:
மெட்ரிகுலேசன் அல்லது அதற்கு சமமான தேர்ச்சியுடன் இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
3. ரத்தம் ஏற்றும் உதவியாளர்:
1 இடம் (பொது).
சம்பளம்:
ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900.
வயது:
27.3.2015 அன்று 27க்குள்.
தகுதி:
அறிவியல் பாடங்களுடன் பிளஸ் 2 மற்றும் மெடிக்கல் லேபரட்டரி படிப்பில் டிப்ளமோ. கம்ப்யூட்டர் அறிவு விரும்பத்தக்கது.
4. மருத்துவ உதவியாளர்:
7 இடங்கள். (பொது - 5, எஸ்சி - 1, எஸ்டி - 1). இவற்றில் மாற்றுத்திறனாளிக்கு ஒரு இடம் உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சம்பளம்:
ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,800
வயது:
27.3.2015 அன்று 27க்குள்.
ராணுவத்தில் பணியாற்றாத விண்ணப்பதாரர்கள் பிளஸ் 2 வுடன் முதலுதவி படிப்பு, ஆபரேஷன் தியேட்டர் அணுகுமுறைகள் ஆகியவற்றை பற்றி தெரிந்திருக்க வேண்டும். முன்னாள் ராணுவத்தினர் ராணுவ மருத்துவ மனைகளில் நர்சிங் உதவியாளராக பணிபுரிந்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் அறிவும் விரும்பத்தக்கது.
www.vfj.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டும் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.3.2015.
No comments:
Post a Comment