Latest News

மத்திய அரசு நிறுவனத்தில் இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு 250 காலியிடங்கள் அறிவிப்பு

மேலே கெட்கப்பட்ட தகுதியுடைய ஆர்வமுள்ள இளைஞர்கள் இதில் பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மத்திய அரசின் நவரத்னா பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான தேசிய கனிம வள நிறுவனம் இந்தியா மற்றும் வெளிநாட்டில் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டு வருகிறது. ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கோடிக்கு மேல் லாபம் ஈட்டி வரும் இந் நிறுவனம், சத்தீஸ்கர், ஜகதால்பூர், நாகர்நர் என்ற இடத்தில் புதிய இரும்பு கனிம தொழிற்சாலையை அமைத்து வருகிறது.

என்எம்டிசி எனப்படும் தேசிய கனிம வள நிறுவனம் மற்றும் தேசிய இரும்பு கனிமவள ஆலையில் 'எக்சிக்யூக்டிவ் டிரெய்னீஸ்' பணிக்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் சத்தீஸ்கரில் உள்ள பெயிலாடில்லா, கர்நாடகாவில் உள்ள பெல்லாரி, பன்னாவில் வைர சுரங்கம் ஆகியவற்றில் பணியமர்த்தப்படுவார்கள்.

மொத்த இடங்கள்:

250 (பொது - 128, ஒபிசி - 68, எஸ்சி - 38, எஸ்டி - 18).

பணி:

1.Executive Trainee (Technical): 

201 இடங்கள். 

துறை வாரியாக இடங்கள் விவரம்: 

செராமிக் - 2, கெமிக்கல் - 11, சிவில் - 7, கம்ப்யூட்டர் மற்றும் தகவல் தொழில்நுட்பம் - 7, எலக்ட்ரிக்கல் - 35, எலக்ட்ரானிக்ஸ் - 5, சுற்றுப்புறச்சூழலியல் - 6, தொழிற்துறை பொறியியல் - 7, இனஸ்ட்ருமென்டேசன் - 10, மெக்கானிக்கல் - 60, மெட்டலர்ஜி - 30, மினரல் புராசசிங் - 7, மைனிங் - 14.

சம்பளம்:

ரூ.20,600 - 46,500. 

வயது: 

24.3.2015 தேதிப்படி 27க்குள். எஸ்சி., எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 வருடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்களும் அதிகபட்ச வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித்தகுதி:

சம்பந்தப்பட்ட பொறியியல் பிரிவுகளில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் முழுநேர பி.இ.,/ பி.டெக்.,. கம்ப்யூட்டர் மற்றும் தகவல் தொழில்நுட்பம் பிரிவிற்கு குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் எம்சிஏ/ எம்.எஸ்சி பட்டம்.

2.Executive Trainee (Administration): 

49 இடங்கள். 

கமர்சியல் - 15, நிதி - 9, மெட்டீரியல்ஸ் மேனேஜ்மென்ட் - 10, பணியாளர் துறை - 15. 

சம்பளம்: 

ரூ.20,600 - 46,500. 

வயது: 

24.3.2015 தேதிப்படி 27க்குள்.

அ. கமர்சியல் பிரிவு:

தகுதி: 

ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் மார்க்கெட்டிங்/ வெளிநாட்டு வணிகம்/ விற்பனை நிர்வாகம் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் எம்பிஏ.

ஆ. நிதி பிரிவு:

தகுதி: 

ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் சிஏ/ ஐசிடபிள்யூஏ.

இ. மெட்டீரியல்ஸ் மேனேஜ்மென்ட்:

தகுதி: 

கலை/ அறிவியல்/ வணிகவியல் பிரிவில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்து மெட்டீரியல்ஸ் மேனேஜ்மென்ட் பாடத்தில் எம்பிஏ அல்லது முதுநிலை டிப்ளமோ.

ஈ. பணியாளர் துறை:

தகுதி: 

ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் சமூகவியல்/ சமூகப்பணி/ தொழிலாளர் நலன்/ பணியாளர் நிர்வாகம்/ தொழில் உறவுகள் ஆகிய பாடங்களில் ஏதாவது ஒன்றில் முதுநிலை டிப்ளமோ அல்லது எம்பிஏ.

விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, குழு விவாதம் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு ஒரு ஆண்டு பயிற்சி அளிக்கப்படும். அப்போது ரூ.20,600 உதவித் தொகையாக வழங்கப்படும். எழுத்துத்தேர்வு சென்னை, ஐதராபாத், பெங்களூர் ஆகிய இடங்களில் நடைபெறும்.

விண்ணப்ப கட்டணம்:

ரூ.300. இதை நெட் பேங்கிங்/ கிரெடிட் கார்டு/ டெபிட் கார்டு மூலம் ஆன்லைனில் செலுத்தவும். எஸ்சி., எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.

www.nmdc.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் விண்ணப்பிக்கவும்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 17.5.2015

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.3.2015. 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.