Latest News

பெற்றோரின் கனவுகளை சுமப்பவர்களா பிள்ளைகள்?

பேராசிரியர் எஸ்.கதிரவன்
பிளஸ் 2 தேர்வுகள் நெருங்கி வருகின்றனஅதற்கு முன்னதாக பிளஸ் 2 படிக்கும்மாணவர்களின் பெற்றோர்களுக்கு எளிமையாக ஒரு தேர்வு... 
உங்கள் குழந்தைக்கு பிடித்த உணவு எது
பிடித்த உடை எது
பிடித்த விளையாட்டு எது
பிடித்த பாடம் எது
பிடித்தமான ஆசிரியர் யார்
உங்கள் குழந்தை என்னவாக விரும்புகிறார்
மேற்கண்ட ஆறு கேள்விகளில் ஐந்து கேள்விக்கு பதில் தெரியும் எனில் நீங்கள் தேர்ச்சிஅடைந்துவிட்டீர்கள்தேர்ச்சி அடையவில்லையாஒன்றும் பிரச்சினை இல்லை.இப்போதுகூட உங்கள் குழந்தையிடம் கேட்டு அறிந்துகொண்டு தேர்ச்சி பெறுங்கள்
சரிவிஷயத்துக்கு வருவோம்வரும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் உங்கள் மகன்/மகள்பெறும் மதிப்பெண் களுக்கான பொறுப்பு அவர்களுக்கானது மட்டும் அல்ல... அதுஆசிரியர்களுக்கு நிகராக உங்களையும் சார்ந்தே உள்ளதுஇன்று பிளஸ் 2 பொதுத் தேர்வைஎதிர்கொண்டுள்ள ஒவ்வொரு வீடும் பரபரப்பு களமாக மாறியுள்ளதுதேர்வைச் சுற்றியேபெற்றோர்குழந்தைகளின் கவனம் சுழன்று கொண் டிருக்கும் தருணம் இதுஇப்போதுநிதானமாக பெற்றோர்கள் யோசித்துஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க வேண்டும்
இந்த போட்டியில் மூன்று தரப்பிலி ருந்து உங்கள் குழந்தை அழுத்தங்களைஎதிர்கொள்கிறது. 1. பெற்றோர் 2. பள்ளி நிர்வாகம் 3. சமூகம்உங்கள் குழந் தையின் பலம்,பலவீனம்எதிர்பார்ப்புகோபம்ஆனந்தம்ஆத்திரம் உள்ளிட்ட சகல குணங்களை அறிந்துஏற்றுக் கொண்டிருக்கும் பெற்றோரால் மட்டுமே மேற்கண்ட மன அழுத்தத்தை நேர்மறைமன அழுத்தமாகஆரோக்கியமான மன அழுத்தமாக உங்கள் குழந்தையின் மீது செலுத்தமுடியும்ஏனெனில் சமூகத்துக்கும் பள்ளி நிர்வாகத்துக்கும் அந்த பொறுப்புகள் கிடையாது.பொரு ளியல் அல்லது ஏதோ ஓர் எதிர்பார்ப்பு அடிப்படையில் அவை இயங்குகின்றன
பெரும்பாலான பெற்றோர் தங்களின் குழந்தைகள் முதல் மதிப்பெண் பெற வேண்டும்;மருத்துவராக அல்லது பொறியாளராக வர வேண்டும் என்று ஆசை கொண்டுள்ளனர்இதுஇயலும் அல்லது இயலாது என்பது அடுத்த விஷயம்
ஆனால்ஒவ்வொரு குழந்தையும் தங்களிடம் இருக்கும் திறமைக்கு ஏற்ப மட்டுமேமதிப்பெண் பெறும் என்கிற அடிப்படை உண்மையை பெற்றோர் உணர வேண்டும்படிப்புவராத குழந் தைக்கு ஓவியத்திலோ அல்லது வேறு ஏதோ ஒன்றிலோ அபரிமிதமான தனித்திறமை இருக்கும்திறமையே இல்லாத குழந்தை என்று யாரும் கிடையாது
ஆனால்அதனை கண்டறிவதுதான் பெற்றோரின் சாமர்த்தியம்குழந்தை யின் திறமைகுறித்து தெரிந்து கொள்ள முடியாத பெற்றோர்உங்கள் பிள்ளையின் நண்பர்கள்நெருங்கிப்பழகும் உறவினர்கள்குழந்தையின் ஆசிரியர் ஆகியோரிடம் கேட்டு அறிந்து கண்டறியவேண்டும்அந்த தனித் திறமைக்கு ஏற்ற வகையிலான துறை சார்ந்த பணிக்கான பாடப்பிரிவுகளை தேர்வு செய்ய பெற்றோர் உதவ வேண்டும்
ஆனால்மேற்கண்ட விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு தடையாக இருப்பது பெற்றோரின்சுயநலமேவிருப்பத்தைநிறைவேறாத அல்லது தங்களால் சாதிக்க இயலாத ஒன்றைகுழந்தையின் தலையில் சுமத்துவதே நடைமுறையில் அதிகமாக இருக்கிறதுஉங்கள்நிறைவேறாத ஆசைகளின் வடிகால் அல்ல உங்கள் பிள்ளைகள்உங்களின் நிறைவேறாதகனவுகளை கண்டடையும் தேவதூதர்களும் அல்ல அவர்கள்அவர்களுக்கு உங் களைப்போன்றே சுயமான ஆசைக ளும் கனவுகளும் கொண்ட சராசரி மனிதர் கள்தான்அவர்களைசூப்பர் மேன்களாக கற்பிதம் செய்துகொள்ளாதீர்கள்எனவேஒருபோதும் உங்கள்பிள்ளையின் விருப்பத்துக்கு மாறான படிப்பைதொழிலை உருவாக்கி கொடுக்கும் சூழலைஏற்படுத்திவிட வேண்டாம்
மிரட்டல் அல்லது கட்டாயப்படுத்தும் விதத்தில் மதிப்பெண் இலக்கு நிர்ண யிக்கக் கூடாது.இலக்கு அடைய முடியாதபட்சத்தில் விபரீதமாக எதையும் செய்யத் துணியும் பதின்மவயதில் உங்கள் பிள்ளை இருக்கிறார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்மாறாகதேர்வுக்கு தயாராகி வரும் குழந்தைகளிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள்இரவு 10மணிக்கு படுக்கைக்கு குழந்தைகளை அனுப்பி அதிகாலை 5 மணிக்கு எழுப்பி படிக்கவையுங்கள்ஒரு நாளைக்கு ஏழு மணி நேரம் ஓய்வு அவசியம்
தேர்வு சமயத்திலும்கூட குழந்தை கள் தினமும் அரை மணி நேரமாவது அவர்கள் விரும்பியஇசைதொலைக் காட்சிவிளையாட்டு உள்ளிட்ட பொழுது போக்குகளில் ஈடுபட வாய்ப்புஏற்படுத்தி கொடுக்க வேண்டும்அப்போது தான்கவனக்குறைவின்றி (Lack of concentration)தேர்வுக்கு அவர்க ளால் தயாராக முடியும்
பெற்றோரின் அன்பும் அரவ ணைப்புமே குழந்தைகளின் தேர்வு பயத்தை போக்கும்அருமருந்துதினமும் குழந்தைகளை பத்து நிமிடம் தியானப் பயிற்சி எடுக்கச் செய்யலாம்
தியானத்தில் இருக்கும் போதுதேர்வு அறையில் பதற்றமின்றி அமர்ந்து இருப்பதைபோன்றும்கேள்வித்தாள் எளிமையாக இருப்பதாகவும்நல்ல முறையில் தேர்வு எழுதிமுடிப்பதை போலவும் அழகான கற்பனை உலகை நினைவில் நிறுத்த கற்றுக்கொடுங்கள்.இதனால்உளவியல் ரீதியாக மனதில் நேர்மறை சிந்தனை அதிகரித்துநல்ல முறையில்தேர்வுக்கு தயாராக முடியும். 
கட்டாயம் தவிர்க்க வேண்டிய வசனங்கள்... 
l “உனக்கு என்ன வேண்டுமோ கேட்டு வாங்கிக்கொள்... எது வேண்டுமானாலும்செய்துகொள்மதிப்பெண் மட்டும் வாங்கிவிடு...” ரீதியிலான வசனங்களை தவிர்க்கவும்.காசு கொடுத்து வாங்குவது அல்ல மதிப்பெண்கள்
l அவரைப் போல வரவேண்டும்இவரைப் போல வர வேண்டும் என்று ஒப்பிடாதீர்கள்.ஏனெனில் உங்கள் பிள்ளை என்பவர் உங்கள் பிள்ளை மட்டுமேநீங்கள் குறிப்பிடும் அவரோஇவரோ அல்ல
l “மதிப்பெண் குறைவாக எடுத்துவிட்டால் எங்களால் வெளியே தலைகாட்ட முடியாது...”என்று சொல்லி உங்கள் பிள்ளையின் தனிப்பட்ட திறன் சார்ந்த விஷயத்தை சமூகம் சார்ந்தபிரச்சினையாக உருவாக்காதீர்கள்
l “நீ எடுக்கும் மதிப்பெண்ணில்தான் நம் குடும்பத்தின் எதிர்காலமே இருக்கிறது...” என்றுஉங்கள் பொறுப்பை உங்கள் பிள்ளையின் மீது சுமத்தாதீர்கள்
பேராசிரியர் எஸ்.கதிரவன்உளவியல் துறைத் தலைவர்பெரியார் பல்கலைக்கழகம்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.