ஓசூர் அருகே பெங்களூர்- எர்ணாகுளம் இடையே செல்லும் இன்டர்சிட்டி பயணிகள் ரயில் இன்று காலை 7.40 மணியளவில் தடம் புரண்டதில் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.வ் பெங்களூரில் இருந்து கோயம்புத்தூர் வழியாக எர்ணாகுளம் வரையில் செல்கின்ற இன்டர்சிட்டி விரைவு ரயில் ஓசூரில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆனைக்கல் என்ற இடத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
பெங்களூரிலிருந்து வந்து கொண்டிருந்த அந்த ரயில் ஆனைக்கல் பகுதியினை கடக்கும் போது திடீரென்று டி-8, டி-9 மற்றும் எஞ்சின் உட்பட நான்கு பெட்டிகள் தடம் புரண்டன. இதில் இரண்டு பொதுப் பெட்டிகளும், 2 ஏசி பெட்டிகளும் அடக்கம், சம்பவ இடத்துக்கு தமிழகம் மற்றும் கர்நாடகா ரயில்வே அதிகாரிகள் விரைந்துள்ளனர். மேலும் இரு மாநிலங்களில் இருந்தும் 10 ஆம்புலன்ஸ் வாகனங்களும் மீட்புப் பணிக்கு விரைந்துள்ளன. D-9 பெட்டிதான் அதிக அளவில் பாதிப்படைந்துள்ளது எனவும், பயணிகள் தடம் புரண்ட பெட்டிகளுக்குள் மாட்டிக் கொண்டுள்ளதால் உயிரிழப்பும் ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது. இதுவரையில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை. ரயில் தடம் புரண்டதற்கு சதிச் செயல் காரணமா என்பது குறித்தும் ஆராயப்படுகிறது.
No comments:
Post a Comment