நித்தியானந்தாவின் பெங்களூரு ஆசிரமத்தில் மரணமடைந்த இளம்பெண்ணின் மரணத்தில் மர்மம் உள்ளதாக அளிக்கப்பட்ட புகாரையடுத்து, அந்தப் பெண்ணின் உடல் இன்று தோண்டி எடுக்கப்பட்டு மறு பரிசோதனை செய்யப்பட்டது.
திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நவலூர் குட்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அர்ஜுன் -ஜான்சிராணி ஆகியோரின் மகள் இளம் பெண் சங்கீதா என்பவர், நித்தியானந்தாவின் பெங்களூரு ஆசிரமத்தில் தங்கி இருந்த நிலையில், கடந்த 28 ஆம் தேதி மர்மமான முறையில் இறந்துள்ளார்.
இவரின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அதனால் மகளின் உடலைத் தோண்டி எடுத்து மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று அவரது தாயார் ஜான்சிராணி, திருச்சி ராம்ஜி நகர் காவல்நிலையத்திலும், கர்நாடக மாநிலம் ராம் நகர் மாவட்ட துணை கண்காணிப்பாளர் ஆர்.குப்தாவிடம் புகார் அளித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து கர்நாடக மாநில பிடரி காவல்நிலைய எஸ்.ஐ லோகித் தலைமையிலான மூன்று போலீஸார் அடங்கிய தனிப்படையினர் முன்னிலையில் இன்று சங்கீதாவின் உடல் தோண்டி எடுக்கப் பட்டு மறு பரிசோதனை செய்யப்பட்டது.
நன்றி விகடன் படங்கள்: தீக்ஷித்
No comments:
Post a Comment