ஒவ்வொரு இந்து மதப் பெண்ணும் 4 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று பாஜக எம்.பி. சாக்சி மகராஜ் பேசியுள்ளது மீண்டும் பிரச்னையை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் நடை பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய எம்.பி. சாக்சி மகராஜ், இந்து மத ஒற்றுமையைப் பலப்படுத்த ஒவ்வொரு இந்து மதப் பெண்ணும் நான்கு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
முந்தைய காலத்தைப் போல ஒரு ஆணுக்கு 4 மனைவிகள் 40 குழந்தைகள் எல்லாம் இந்த காலத்திற்கு ஒத்து வராது என்று கூறியுள்ளார்.
இதனால் மீண்டும் சாக்சி மகராஜ் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
இவர் ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் பசுவைக் கொல்பவர்களையும், மதம் மாறுபவர்களையும் மரண தண்டனைக்கு ஈடான தண்டனை கொடுத்து தண்டிக்க வேண்டும் என்று பேசி பெரும் பிரச்னையை உருவாக்கி இருந்தார்.
அதேபோல காந்தியைச் சுட்டுக் கொன்ற கோட்சேவை சிறந்த தேசபக்தர் என்று கூறி பின்னர் மன்னிப்புக் கேட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment