புதுடில்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி 7ம் தேதி நடைப்பெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. பா.ஜ. முதல்வர் வேட்பாளராக முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி கிரண்பேடி போட்டியிடுகிறார்.
ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளராக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடுகிறார். இவ்விரு வேட்பாளர்களும் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய புறப்படுவதற்கு முன்னதாகவே பா.ஜ., முதல்வர் வேட்பாளர் கிரண்பேடி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரியான கிரண்பேடி சமீபத்தில் பா.ஜ.,வில் இணைந்தார். டில்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு இவருக்கு சீட் அளித்த பா.ஜ., கிரண்பேடியை முதல்வர் வேட்பாளராகவும் அறிவித்தது.
வேட்புமனு தாக்கல் கடைசி நாளான இன்று கிரண்பேடி மனு தாக்கலுக்கு முன்பு தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக சென்று தான் போட்டியிடும் கிருஷ்ணாநகர் தொகுதியில் உள்ள லாலா லஜபதி ராயின் சிலைக்கு மாலை அணிவித்தும், பா.ஜ.,வின் கட்சி சின்னம் பொறித்த துண்டையும் சிலைக்கு அணிவித்தார்.
இச்சந்தர்ப்பத்தை பயன்ப்படுத்தி காங்கிரசும், ஆம்ஆத்மி.,யும் கிரண்பேடியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆம்ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால், சுதந்திர போராட்ட வீரர்களுக்கு கிரண்பேடி மத சாயம் பூச முயற்சிக்கிறார்.
சுதந்திர போராட்ட வீரர்கள் எந்த கட்சியையும் சார்ந்தவர்கள் இல்லை. அவர்கள் நாட்டை சேர்ந்தவர்கள். அவர்களை நாம் பா.ஜ,விற்கோ, காங்கிரசிற்கோ அல்லது மற்ற கட்சிகளை சேர்ந்தவர்கள் என்றோ பிரிப்பது சரியில்லை என தெரிவித்துள்ளார்.
காங்கிரசும் இச்செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இந்நிலையில் கிரண்பேடி மக்களின் தேவைகள் என்ன என்பதை கண்டறிந்து, அவற்றை பூர்த்தி செய்வதே எனது குறிக்கோள் எனவும் நான் ஏற்கனவே என்னை முதல்வராகத் தான் உணர்கிறேன். மக்களின் பாதுகாப்பிற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து அதனை மேற்கொள்வேன் என தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டபேரவை தேர்தலில் பா.ஜ.க முதலமைச்சர் வேட்பாளர் திருமதி.கிரண்பேடிக்கு கட்சியில் கடும் எதிர்ப்புகிளம்பியுள்ளது .இதற்க்கு இடையில் அவர்குடைய கட்சிக்குள்ளும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது
No comments:
Post a Comment