Latest News

ராஜபக்சேவுக்கு போட்டியாக $8000 கோடி சுருட்டிய 20 மாஜி அமைச்சர்கள்


கொழும்பு: இலங்கையில் முன்னாள் அதிபர் ராஜபக்சே குடும்பத்தினர் சுருட்டிய ரூ.13 ஆயிரம் கோடியைத் தொடர்ந்து அவரது ஆட்சியின் போது மேலும் ரூ.8 ஆயிரம் கோடியை விழுங்கி ஏப்பம் விட்ட 20 அமைச்சர்கள் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே படுதோல்வியை தழுவினார். எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்ட மைத்ரிபால சிறிசேன வெற்றி பெற்று அதிபரானார். தேர்தலின் இறுதி நேரத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தி ராணுவத்தின் துணையுடன் ஆட்சியை தக்க வைக்க ராஜபக்சே முயன்றதாக புதிய அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதுதவிர ராஜபக்சேவின் ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள், முறைகேடுகள், வன்கொலைகள், மனித உரிமை மீறல்கள், போர் குற்றங்கள், அத்துமீறல்கள் போன்றவற்றை மைத்ரிபால சிறிசேன அரசு தோண்டி துருவத் தொடங்கிவிட்டது. புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேனவும், புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும் ராஜபக்சேவுக்கு எதிரான நடவடிக்கைகைள துரிதப்படுத்தி வருகின்றனர். அவர்களது மகன்கள் முறைகேடாக வெளிநாட்டு கார் வாங்கிய விவகாரம், வெள்ளை வேன் மூலம் ராணுவம் மற்றும் போலீசாரை பயன்படுத்தி அவரது

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.