பாரிஸ் சூப்பர் மார்க்கெட் தாக்குதலில் பலரின் உயிரை காப்பாற்றிய இஸ்லாமிய ஊழியருக்கு பிரெஞ்சு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 9ம் திகதி பிரான்சில் கிழக்கு பாரிஸ் பகுதியில் உள்ள கோஷர் சூப்பர் மார்க்கெட்டிற்குள்(Kosher supermarket) நுழைந்த தீவிரவாதி ஒருவன் பலரை பிணைக்கைதியாக பிடித்து வைத்திருந்தான்.
அப்போது லசானா பாத்திலி(Lassana Bathily Age-24) என்ற கடையின் பணியாளர் தீவிரவாதியிடமிருந்து பலரையும் காப்பாற்றியுள்ளார்.
ஆப்ரிக்க நாடான மாலியை(Mali) தாய்நாடாக கொண்ட இந்த இஸ்லாமிய இளைஞர், பிரான்சில் கடந்த 9 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.
மேலும் கடந்தாண்டு தான் இவர் குடியுரிமைக்கு விண்ணப்பித்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இவரது வீரச் செயலை கவுரப்படுத்தும் வகையில் பிரான்ஸ் அரசாங்கம் அவருக்கு பிரெஞ்சு குடியுரிமை வழங்கியுள்ளது.
இந்தக் குடியுரிமை வழங்கப்பட்ட நிகழ்வில் கலந்துக் கொண்ட பிரெஞ்சு பிரதமர் மான்யுவெல் வேல்சும்(Manuel Valls) மற்றும் உள்துறை அமைச்சர் பெர்னார்ட் காசென்யுவெவும் (Bernard Cazeneuve), லசானா பாத்திலி காட்டிய துணிச்சலுக்காக, நாட்டின் சார்பில் அவருக்கு தங்களது நன்றிகளை தெரிவித்துள்ளனர்
No comments:
Post a Comment