இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஆங்கிலேயர்களின் அடக்கு முறையை புரட்சிகள் மற்றும் போராட்டங்கள் மூலம் எதிர்த்து நாட்டு மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்கப் பாடுபட்ட தியாகிகளையும், தேசத் தலைவர்களையும் நினைவு கூர்ந்து போற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், நாட்டு மக்களுக்கு சம உரிமை, சம வாய்ப்பு கிடைத்து உண்மையான குடியரசாக நாடு விளங்கிட அனைவரும் சூளுரை மேற்கொள்வோம் எனத் தெரிவித்துள்ளார்.
புதுவை முதல்வர் ரங்கசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் " இக்குடியரசு திருநாளில் நம் நாட்டுயர்வில் நமக்கான பங்கை உணர்ந்து அதை நோக்கி செயல்பட்டு பெருவளர்ச்சி காண்போம். இக்குடியரசு திருநாளில் நல்வாழ்வும், வளமும் அனைவருக்கும் வாய்த்திட என் உளங்கனிந்த குடியரசு தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment