தமிழகத்தில் பழைய மின்சார மீட்டர்களுக்கு பதிலாக புதிய டிஜிட்டல் மீட்டர்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு மாற்றபடும் "டிஜிட்டல் மீட்டர்களுக்கு யாரும் கட்டணம் செலுத்த தேவையில்லை" என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பழைய தொழில்நுட்பத்துடன் இயங்கும் மின் மீட்டர்களை மாற்றி, புதிய தொழில் நுட்பத்துடன் இயங்க கூடிய டிஜிட்டல் மின் மீட்டர்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக, தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் ஆய்வாளர்கள், மின் உதவியாளர்கள் ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளார்கள்.
"மின் மீட்டர்களை மாற்றும்போது பொதுமக்களிடம் இருந்து எவ்வித கட்டணமும் வாங்கக் கூடாது என்று அவர்களுக்கு ஆணையிடப்பட்டுள்ளது. புதிய மின் மீட்டர்கள் பொருத்தப்படும் போது யாரேனும் அதற்கு கட்டணம் வசூலிப்பதாக புகார் வருவதாக இருந்தால் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது
எனவே, பொதுமக்கள் "புதிய டிஜிட்டல் மின் மீட்டர்கள் பொருத்தும் பணிக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறும், மாற்றும் பணிக்கு யாரேனும் பணம் கேட்டால் கொடுக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment