அமெரிக்க அதிபர் ஒபாமா இன்று இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ளார்.
இந்தியாவின் குடியரசு தின விழாவில் கலந்துக் கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஒபாமா தனது மனைவி மிச்செலுடன் இன்று காலை 9.50 மணிக்கு பாலம் விமான நிலையத்தில் வந்திறங்கினார்.
ஒபாமாவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று அவரை வரவேற்றார். இரு நாட்டு அதிகாரிகளும் ஒபாமாவின் வரவேற்பில் கலந்துக்கொண்டனர். ஒபாமாவின் வருகைக்காக புது டெல்லி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
3 நாள் பயணமாக வந்துள்ள ஒபாமா இன்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியையும், பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திக்கிறார். மேலும் மகாத்மா காந்தி சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தவுள்ளார்.
No comments:
Post a Comment