பீர் பாட்டில்களில் உள்ள காந்தியின் படத்தை நீக்க அமெரிக்க நிறுவனம் முடிவுசெய்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த மதுபான தயாரிப்பு நிறுவனமான 'நியூ இங்கிலாந்து பிரிவிங் கம்பெனி' சமீபத்தில் 'காந்தி பாட்' என்ற பெயரில் டின் பீர் ஒன்றை அறிமுகம் செய்தது. மேலும், அந்த பீர் டின்களில் மகாத்மா காந்தி படமும் அச்சிடப்பட்டிருந்தது.
இதற்கு இந்தியர்களிடம் இருந்தும் பல்வேறு அமைப்புகளிடமிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் பீர் டின்களில் இருந்து காந்தியின் படத்தை இடம்பெறச் செய்ததற்கு பதிலடியாக, கோவையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் காலணியில் அமெரிக்கர்கள் பெரிதும் போற்றும் தலைவரான ஜார்ஜ் வாஷிங்டனின் படத்தை இடம்பெறச் செய்து, அதனை அமெரிக்க அதிபர் மற்றும் அந்நாட்டு உயர்மட்ட அரசு தலைவர்களுக்கு அனுப்பி வைத்தார்.
இந்நிலையில், மேற்கூறிய பீரின் பெயரை மாற்றவும், டின்களில் உள்ள காந்தி படத்தை நீக்க உள்ளதாக 'நியூ இங்கிலாந்து பிரிவிங் கம்பெனி' தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment