Latest News

பல் வலி, வாய் துர்நாற்றம், மஞ்சள் நிற பற்கள் இயற்கை நிவாரணிகள்!


நம் இந்திய நாடு பல்வேறு விஷயங்களுக்கு புகழ் பெற்றவையாகும். அப்படிப்பட்ட ஒன்று தான் மசாலாக்கள். மசாலா என்றாலே நம் நினைவில் முதலில் வருவது இந்தியா தான். நம் உணவுகள் காரசாரமாக, சுவைமிக்கதாக இருப்பதற்கு காரணமே நம்மிடம் உள்ள பல வகையான மசாலாக்கள் தானே. உணவுகளின் சுவைக்கு மட்டும் தான் இந்த மசாலாக்களா என்றால் கண்டிப்பாக இல்லை. மசாலாவில் கூடுதலாக பலவித உடல் நல பயன்கள் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?

ஈறுகளில் இருந்து இரத்தம் கசிகிறதா? இத டெய்லி ஃபாலோ பண்ணுங்க…

மிகவும் பழங்காலம் முதலே ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த மசாலா பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது சிலருக்கு தெரிந்திருந்தாலும் பலருக்கும் தெரிவதில்லை. பல விதமான நோய்களுக்கு நிவாரணம் அளிக்க பல விதமான மசாலாக்கள் உதவுகிறது. ஒவ்வொரு மசாலாவின் மருத்துவ குணங்களைப் பற்றி சொல்ல வேண்டுமானால் ஒரு புத்தகமே எழுதி விடலாம். சமையலறைக்கு மட்டும் தான் மசாலா என்றில்லாமல் இப்படி உடல்நல ஆரோக்கியத்திற்கும் பயன்படும் மசாலாக்கள், வாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் உதவுகிறது. அதைப் பற்றி சற்று விரிவாக பார்க்கலாமா?

பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் சில எளிய வழிகள்!!!

பல் துவாரங்கள், தொற்றுக்கள் மற்றும் ஈறு நோய்கள் போன்ற பல்வேறு காரணங்களால் தான் பல்வலி ஏற்படுகிறது. பல் மருத்துவரை அணுகுவது கட்டாயம் தான் என்றாலும் கூட, உடனடி இயற்கை தீர்வை அளிக்கும் சில வழிகளைப் பற்றி தெரிந்து கொள்வோமா?

அழற்சி எதிர்ப்பி மற்றும் வலி நிவாரணி குணங்களை கொண்டுள்ள இந்த மசாலா, பல்வலியுடன் போராடும் சிறந்த இயற்கையான நிவாரணியாகும். அதற்கு முழு கிராம்பு ஒன்றை பாதிக்கப்பட்ட பற்களின் இடையில் வைத்து சிறிது நேரத்திற்கு வாயை இறுக்கமாக மூடிக் கொள்ளுங்கள். இதனால் கிராம்பில் உள்ள ரசாயனம் வெளியேறி, வலிக்கு நிவாரணம் அளிக்கும்.

அழற்சி எதிர்ப்பி குணங்களுக்காக நன்கு அறியப்பட்ட ஜாதிக்காய், பல்வலிக்கு சிறந்த நிவாரணியாக விளங்குகிறது. வலி நீங்கும் பயன்களைப் பெறுவதற்கு ஜாதிக்காய் பொடியை வலி ஏற்படும் பல் மீது தடவிக் கொள்ளுங்கள். சிறிது நேரம் கழித்து வாயை கழுவிவிடுங்கள்.

ஈறுகளுக்கும், பற்களுக்கும் இந்த மசாலா மிகுந்த நன்மையை அளிக்கிறது. அதற்கு காரணம் அதிலுள்ள பாக்டீரியா எதிர்ப்பி செயல்பாடு. உடனடி நிவாரணத்தைப் பெற, சிறிய அளவிலான லவங்கப்பட்டையை வாயில் போட்டு மென்று, மெதுவாக அதன் சாறை விழுங்கவும்.

பல பேர்களுக்கு, ஒருவருடனான உறவில், சுவாச துர்நாற்றம் பெரிய தடையாக விளங்குகிறது. இருப்பினும் நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் மசாலாக்கள் இதற்கு தீர்வை அளிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

திடமான வாசனையுடன் கூடிய ஏலக்காயில் இனிமையான வாசனையும் பாக்டீரியா எதிர்ப்பி குணங்களும் அடங்கியுள்ளதால், சுவாச துர்நாற்றத்திற்கு இது சிறந்த நிவாரணியாக விளங்கும். இதனை உங்கள் உணவிற்கு பிறகு அப்படியே மெல்லவும் செய்யலாம் அல்லது டீயில் கலந்து தினமும் காலையில் குடித்தால் உங்கள் பிரச்சனை நீங்கும்.

யூகெனோல் என்ற பாக்டீரியா எதிர்ப்பி பொருள் கிராம்பில் உள்ளதால், சுவாச துர்நாற்றத்தை எதிர்த்து இது போராடும். அந்த காரணத்தினால் தான், சுவாச துர்நாற்றம் உடையவர்கள் கிராம்பை வாயில் போட்டு மெல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

லவங்கப்பட்டையிலும் பாக்டீரியா எதிர்ப்பி குணங்கள் உள்ளது. இது சுவாச துர்நாற்றத்தை குறைக்க உதவும். இதனை வாயில் போட்டு மெல்லலாம் அல்லது டீயில் கலந்து குடிக்கலாம். இல்லாவிட்டால் அதனை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, பின்னர் குளிர்ந்த பிறகு, வாயை அலசவும் பயன்படுத்தலாம்.

பொதுவாக உணவருந்திய பிறகு பயன்படுத்தப்படும் பெருஞ்சீரகம், வாய் நறுமணத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. இது எச்சில் ஊறுவதற்கு மட்டும் பயன்படாமல், வாயிலுள்ள பாக்டீரியாக்களுடன் சண்டையிட்டு, வாய் துர்நாற்றத்தை போக்கவும் உதவும்.

முத்துப் போன்ற வெண்மையான பற்களை வைத்திருக்க யாருக்கு தான் ஆசை இருக்காது? வெண்மையான பற்களுக்கு வாய் சுகாதாரமும் பராமரிப்பும் மிகவும் முக்கியமாகும். இதனை அடைய சில மசாலாக்களும் உதவுகிறது.

பற்களில் உள்ள கறைகளை நீக்க எள் உதவும். பற்களை மற்றொரு வழியிலும் வெண்மையாக்கலாம். அது நல்லெண்ணெய்யை கொண்டு வாயை அலசுதல். இந்த எண்ணெயை கொண்டு 15 நிமிடங்களுக்கு வாயை கொப்பளித்து, பின் துப்பி விடவும். பின்னர் தண்ணீரை கொண்டு வாயை அலசவும். தினமும் காலை இதனை செய்தால் பளிச்சிடும் பற்களை பெறலாம்.

வியக்க வைக்கும் இந்த மசாலா வாயிலுள்ள பாக்டீரியாவால் கறைகள் வளராமல் தடுக்கும். ஜாதிக்காய் பொடியை ஒரு சிட்டிகை எடுத்து பற்களின் மீது தேய்க்கவும். பின் வாயை தண்ணீரை கொண்டு அலசவும். இப்படி செய்வதால், பற்களில் உள்ள கறைகள் நீங்கி, பற்கள் வெண்மையாகும்.

ஈறு பிரச்சனைகள் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளது. இதனால் அழற்சி மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவ்வகையான அனைத்து ஈறு நோய்களையும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் இந்திய மசாலாக்களை கொண்டே குணப்படுத்தலாம்.

காய்ந்த இஞ்சி பொடியை வீங்கிய ஈறுகளின் மீது தடவினால் ஈறுகளில் ஏற்பட்டுள்ள வலி மற்றும் வீக்கத்தில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். இதில் அழற்சி எதிர்ப்பி பொருட்கள் அடங்கியுள்ளதால், ஈறு வலியை போக்கி நிவாரணத்தை அளிக்கும்.

ஈறுகளின் வீக்கம், வலி மற்றும் அழற்சி போன்ற பலவிதமான வாய் பிரச்சனைகளை தடுக்க இந்த மசாலா சிறப்பாக செயல்படுகிறது. ஜாதிக்காய் எண்ணெயை பஞ்சுருண்டையின் மீது சிறிதளவு ஊற்றி, பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி விடவும்.

ஈறு நோய்களை இயற்கையான வழியில் குணப்படுத்த அதிகமாக பயன்படுத்தும் மசாலாக்களில் இதுவும் ஒன்றாகும். இதில் யூகெனோல் உள்ளதால் அது வலி நிவாரணி மற்றும் ஆன்டி-செப்டிக்காகவும் செயல்படுகிறது. ஈறு வலி மற்றும் அழற்சியில் இருந்து விடுபட கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளின் திசுக்களில் தடவவும்.

பல் ஈறு அழற்சி அல்லது பல்வலி மற்றும் சுவாச துர்நாற்றம் போன்ற இதர சில வாய் பிரச்சனைகள் இருந்தால், லவங்கப்பட்டையை சிறிதளவு வாயில் போட்டு மெல்லவும். இதிலுள்ள பாக்டீரியா எதிர்ப்பி குணங்கள் பற்கள் மற்றும் ஈறுகளுக்கு சாதகமாக வேலை செய்ய வைக்கும்.

வாய் அல்சர் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் கூட, அதனால் ஏற்படும் பிரச்சனைகள் பெரியளவில் இருக்கும் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். காரசாரமான மற்றும் துவர்ப்பான உணவுகளை தவிர்ப்பதால் மட்டும் இதனை தடுத்து விட முடியாது. இதற்கு நிவாரணம் அளிக்கும் மசாலா உங்கள் சமயலறையிலேயே உள்ளது.

உடலில் அளவுக்கு அதிகமாக வெப்பம் ஏறும் போது வாய் அல்சர் ஏற்படும். அதனால் உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தும் கசகசாவை பயன்படுத்தினால் அதற்கு நிவாரணம் கிடைக்கும். கசகசாவில் செய்யப்பட்ட சாக்லெட், துருவப்பட்ட தேங்காய் மற்றும் சர்க்கரையை கொண்டு வாய் அல்சருக்கு வலியில்லாத நிவாரணத்தை பெறலாம்.

மஞ்சள் என்பது மிகச்சிறந்த ஆன்டி-செப்டிக் மற்றும் அழற்சி எதிர்ப்பியாக செயல்படுகிறது. வாய் அல்சரை எதிர்த்து போராடி, அது மீண்டும் வராமல் இருக்க உதவுவது இந்த குணங்களே. ஒரு சிட்டிகை மஞ்சளை தண்ணீரில் கலந்து, அந்த பேஸ்ட்டை வாயில் தடவினால், அல்சருக்கு நிவாரணம் கிடைக்கும்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.