மத்தியப் பிரதேசத்தின் செந்த்வா ஏரியாவைச் சேர்ந்த டெரர் சப்-இன்ஸ்பெக்டர், மோனிகா சிங். இப்போது, ‘க்யூன் ஆப் செந்த்வா’வும் மோனிகாதான். ஆண் போலீஸ்கள், என்கவுன்ட்டர்களுக்கு ஸ்பெஷலிஸ்ட் என்றால், அம்மணி, ஈவ்டீசிங் ஆசாமிகளை நையப்புடைப்பதில் செம எக்ஸ்பர்ட். இப்போது செந்த்வா பகுதியில், ஓரளவுக்கு பெண்களால் சுதந்திரமாக நடமாட முடிவதற்குக் காரணம் மோனிகா சிங்தான் என்று இந்த லேடி இன்ஸ்பெக்டரை நோக்கி விரல் நீட்டுகிறார்கள் அந்த ஏரியா பெண்கள்.
மோனிகாவின் சமீபத்திய அட்டாக் – ரொம்ப நாட்களாக பெண்களிடம் வம்பு பண்ணிக் கொண்டிருந்த விராட்டோனி என்னும் மன்மத ராசா ஒருவனை, ஈவ்டீசிங்கிற்கு ஆளான பெண்களை விட்டே செருப்படி தண்டனை கொடுத்திருப்பது செந்த்வாவில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. ‘‘பள்ளி மாணவிகள், வேலைக்குச் செல்லும் பெண்கள், இவ்வளவு ஏன் – சிறுமிகளைக்கூட ஜாடைமாடையாகக் கேலி பேசுவது… வம்பு பண்ணுவது… டபுள் மீனிங்கில் கலாய்ப்பது என்று ரொம்ப நாட்களாக, விராட்டோனியின் தொந்தரவு தாங்க முடியவில்லை.
பெண்கள் கூட்டாகச் சேர்ந்து, ஒரு கட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மோனிகா மேடத்திடம் கம்ப்ளெய்ன்ட் செய்தோம். உடனடி நடவடிக்கை எடுத்தார் மேடம். கம்ப்ளெய்ன்ட் கொடுத்த அனைவரையும் வரச் செய்து, தர்ம அடி கொடுத்து, எங்கள் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கச் செய்தார்’’ என்று விராட் டோனியால் பாதிப்புக்குள்ளான பெண் ஒருவர் வீறுபொங்கச் சொன்னார்.
‘என்னதான் இருந்தாலும், தண்டிப்பதற்கு கோர்ட் இருக்கிறது; இது மனித உரிமை மீறல்’ என்று விராட் டோனியின் உறவினர்கள் வழக்கம்போல் போர்க்கொடி தூக்க, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் விராட் டோனி. ‘‘பள்ளிச் சிறுமிகளிடம் வம்பு செய்த இவனுக்குக் கொடுக்கப்பட்ட இந்தத் தண்டனை சரியானதே’’ என்று நீதிபதி தீர்ப்பு சொல்லவே, இப்போது அந்த ஏரியா பெண்களின் மனசில் ஒயிலாகவும், மன்மதன்கள் மனசில் திகிலாகவும் வலம் வருகிறார்
No comments:
Post a Comment