தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பாமக விலகினால் எந்த பின்னடைவும் ஏற்படாது என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய ராதாகிருஷணன், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பாரதிய ஜனதா கூட்டணியில் நீடிப்பது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று தெரிவித்த கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த அவர், கூட்டணியில் இருந்து பாமக விலகினால் அது எந்த அளவிலும் பின்னடவை ஏற்படுத்தாது என்றார்.
மீத்தேன் திட்டத்தை பொறுத்தவரை தமிழகத்தின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு செயல்படும் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
சவுதி உள்ளிட்ட நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment