பஞ்சாப் மாநிலத்தில் 500 ரூபாய் காணாமல் போனதற்காக வகுப்பு மாணவிகளை நிர்வாணமாக்கி சோதனையிட்டுள்ளார் ஆசிரியர் ஒருவர்.
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் மாதியாலாவில் உள்ள அரசு பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றுபவர் ஹர்ஜித்கவுர். இவர், 7 ஆம் வகுப்புக்கு பாடம் நடத்த சென்றபோது அவரது பர்சில் இருந்த 500 ரூபாய் காணாமல் போயுள்ளது. அந்த பணத்தை வகுப்பு மாணவிகளில் ஒருவர் தான் திருடியிருக்க வேண்டும் என்று ஹர்ஜித்கவுர் சந்தேகப்பட்டு கேட்டுள்ளார்.
ஆனால், அந்த பணத்தை தாங்கள் யாரும் எடுக்கவில்லை என்று மாணவிகள் மறுத்த போதிலும் அவர் விடாமல் 13 மாணவிகளை வரிசையாக நிற்க வைத்து அவர்களது ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி சோதனையிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தால் அவமானம் அடைந்த மாணவிகள் இதுபற்றி தங்களது பெற்றோரிடம் கூறி இருக்கின்றனர். இதில் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஆசிரியர் ஹர்ஜித் கவுரை தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment