Latest News

உணவில் மஞ்சள் பொடியை அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் 14 பக்க விளைவுகள்!


மஞ்சள் என்பது எவ்வளவு மகத்துவம் வாய்ந்தது என்பதை நாங்கள் சொல்ல தேவையில்லை. எந்த ஒரு நல்ல காரியமும் மஞ்சளுடன் தான் தொடங்கும். சமையலுக்கு மஞ்சள் பயன்படுத்தபடாத பதார்த்தமே இல்லை என கூறலாம். மேலும் அதிலும் உடல்நல குணங்களைப் பற்றி தனியாக கூற வேண்டுமா என்ன? மஞ்சள் என்பது மிகப்பெரிய கிருமிநாசினி என்பதும் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும். அதனால் தான் அது ஒரு மிகச்சிறந்த மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஏற்கனவே சொன்னதை போல், இந்தியாவில் உள்ள அனைத்து உணவுகளிலும் மஞ்சள் இல்லாமல் இருக்காது. இதெல்லாம் நீங்கள் அறிந்ததே. ஆனால் உங்களில் பலருக்கும் தெரியாத விஷயம் ஒன்றும் உள்ளது. அது தான் மஞ்சளில் உள்ள பக்க விளைவுகள். பின்ன என்ன, நல்லது என்று ஒன்று இருந்தால், கெட்டது என்றும் இருக்க தானே செய்யும். மஞ்சள் பொடியால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இத்தனை வருட காலமாக மஞ்சள் என்பது அழற்சியை குறைக்கும் மிகச்சிறந்த ஒரு பொருளாக தான் நாம் பார்த்துள்ளோம். சில நேரங்களில் புண் அல்லது வெட்டுக்காயங்களுக்கும் கூட அது மருந்தாக இருந்துள்ளது. இருப்பினும் அளவுக்கு அதிகமான மஞ்சள் உங்கள் உடல்நலத்தை சீர்குலைத்துவிடும் என இன்றைய வல்லுனர்கள் கூறுகின்றனர்.

ஒவ்வொரு உணவிலும் மஞ்சளை சேர்ப்பதால் அது பல்வேறு பிற பிரச்சனைகளை இழுத்துவிடும் என்பதை அறிந்தால் நீங்கள் வாயடைத்து போவீர்கள். ஆராய்ச்சிகளின் படி, அளவுக்கு அதிகமாக மஞ்சளை உட்கொண்டால், உங்கள் சருமத்தில் அரிப்பையும் வறட்சியையும் ஏற்படுத்தும். மேலும் வயிற்றின் உட்பூச்சை பாதித்து, காலப்போக்கில் காஸ்ட்ரிக் பிரச்சனைகளையும் உண்டாக்கும். மஞ்சளினால் ஏற்படும் அபாயங்களைப் பற்றி பார்க்கலாமா?

அலர்ஜிகளுக்கு கெட்டது
உங்களுக்கு இந்திய மசாலாக்கள் அலர்ஜி என்றால், மஞ்சள் பயன்படுத்துவதில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த மஞ்சள் உங்கள் அலர்ஜியை அதிகரிக்கவே செய்யும்.

பித்தப்பை பிரச்சனைகள்
பித்தப்பையில் கற்கள் உருவாக்கத்தை மஞ்சள் அதிகரிக்க செய்யும் என்பது உங்களுக்கு தெரியுமா? இதுப்போக, காஸ்ட்ரோ ஈசோஃபேகில் ரிஃப்லக்ஸ் டிசார்டர் (GERD) பிரச்சனையை இன்னும் மோசமடைய தான் செய்யும். மஞ்சள் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகளில் இதுவும் ஒன்றாகும்.

ஈரல் பிரச்சனைகள்
ஈரல் வீக்கம் அல்லது பிற பிரச்சனைகள் உள்ளவர்கள் எந்த வடிவத்திலும் மஞ்சளை எடுத்துக் கொள்ள கூடாது. மஞ்சள் பொடியில் உள்ள குணங்கள் தற்போதிருக்கும் ஈரல் பிரச்சனைகளை மோசமடைய செய்யும்.

கர்ப்பிணி பெண்களுக்கு நல்லதல்ல
பிறக்க போகும் குழந்தை வெள்ளையாக பிறக்க வேண்டும் என்ற ஆசையால், கர்ப்பிணி பெண்கள் பலரும் தாங்கள் குடிக்கும் பாலில் மஞ்சளை கலந்து குடிக்கின்றனர். இருப்பினும் சீக்கிரமே முதிர்சியடைகிற கருப்பை சுருக்கங்கள், கருப்பை இரத்த கசிவு அல்லது வலிமிக்க கருப்பை பிடிப்பு ஏற்படும் இடர்பாடு மஞ்சளால் அதிகமாக உள்ளது.

சர்க்கரை நோய்க்கான மருந்து
சர்க்கரை நோய்க்கு ஓரளவிற்கு மஞ்சள் நன்மையை செய்தாலும் கூட, அதிகமாக எடுத்துக் கொண்டால் குழப்பமே நீடிக்கும். இவர்கள் ஏற்கனவே மருந்து உட்கொண்டு வந்தால், ஹைபோகிளைசீமியா (குறைந்த இரத்த சர்க்கரை அளவு) ஏற்படவும் செய்யும்.

மலட்டுத் தன்மை பிரச்சனைகள்
சில நேரங்களில், மஞ்சளை உட்கொள்வதால் இனப்பெருக்க அமைப்பின் மீதும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும், குறிப்பாக ஆண்களுக்கு. அளவுக்கு அதிகமாக மஞ்சளை உட்கொண்டால் விந்தணு உற்பத்தி குறையும் என ஆராய்ச்சிகள் கூறுகிறது.

இரும்புச்சத்து குறைபாடு
யாருக்கு தங்கள் உடலில் இரும்புச்சத்து குறைபாடு உள்ளதோ அவர்களுக்கு மஞ்சளினால் கூடுதல் தாக்கம் இருக்கும். அதனால் நீங்கள் இரத்த சோகை உள்ளவர் என்றால், மஞ்சளை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.

அறுவை சிகிச்சைக்கு பிறகு ஆபத்தானது
அளவுக்கு அதிகமான மஞ்சள் இரத்த உறைதல் செயல்முறையை தடுக்கும். அதனால் அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு இது மிகவும் ஆபத்தானதாய் விளங்குகிறது.

வாய்வு பிரச்சனைகள்
அளவுக்கு அதிகமாக மஞ்சளை உட்கொண்டால், வயிற்று கோளாறுகள் ஏற்படும். இதனால் வயிற்று போக்கு மற்றும் மலச்சிக்கல் ஏற்படலாம். மஞ்சள் பொடியினால் ஏற்படும் முக்கியமான பக்க விளைவுகளில் இதுவும் ஒன்றாகும்.

நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும்
உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியையும் மஞ்சள் பாதிக்கும். உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பை வலுவிழக்க செய்யும் மஞ்சள்.

குமட்டலை அதிகரிக்கும்
உங்கள் உணவில் மஞ்சள் அதிகமாக சேர்க்கப்பட்டிருந்தால் அது குமட்டல் உணர்வை தான் ஏற்படுத்தும். மஞ்சள் பொடியால் ஏற்படும் பக்க விளைவுகளில் இதுவும் ஒன்றாகும்.

ஒற்றைத் தலைவலி உள்ளவர்களுக்கும் ஆபத்து
மஞ்சளால் ஒற்றைத் தலைவலியும் ஏற்படும். மதிய உணவிற்கு பிறகு, உங்களுக்கு மோசமான தலைவலி ஏற்பட்டால், அது உங்கள் உணவில் சேர்க்கப்பட்டிருந்த மஞ்சளால் தான் இருக்கும்.

மார்பக புற்றுநோய்
சில நேரங்களில் புற்றுநோய் அணுக்களை எதிர்த்து கொல்ல மஞ்சள் உதவினாலும், சில நேரங்களில் அப்படியே எதிர்மறையாக நடந்து கொள்ளும். அதனால் மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது.

சிறுநீரக கற்களுக்கு நல்லதல்ல
மஞ்சளால் சிறுநீரக கற்களும் உருவாகும். உங்கள் உணவில் உள்ள மஞ்சளால் ஏற்படும் பக்க விளைவுகளில் இதுவும் ஒன்றாகும்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.