குடியரசு தினத்திற்கு சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் ஒபாமா வருவதால், பாதுகாப்புக்காக 15,000 கண்காணிப்பு கேமராக்களை ஒரு வாரத்திற்குள் பொருத்துகிறீர்கள். ஆனால் நாட்டு மக்களுக்கான இதே வேலையை சொல்லும் போது அது ஏன் தோல்வியில் முடிகிறது என நீதிபதிகள் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர். டெல்லியை சேர்ந்த வக்கீல் மீரா பாட்டியா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வருகைக்காக 15,000 கண்காணிப்பு கேமராக்களை மாநகர் முழுவதும் பொருத்துகின்றனர். அவற்றை உடனடியாக நீக்க கூடாது. நிர்பயா வழக்கு சமயத்தில், தேசிய தலைநகர் முழுவதும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது. நிர்பயா போன்ற குற்றங்கள் மீண்டும் நடக்க கூடாது“.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவானது டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் பதர் துரஸ் அகமது, சஞ்சீவ் சக்சேனா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது மனுவை விசாரித்த நீதிபதிகள் கூறும்போது, ‘பாதுகாப்புகள் அதிகரிக்கப்படுவது வெளி நாட்டு அதிபருக்காக, உள்நாட்டு மக்களுக்காக அல்ல. இதை பொதுமக்களுக்காக நாங்கள் செய்ய சொன் னால் எவ்வளவு காலம் ஆகும், மாதங்களிலும் ஆண்டுகளிலும் தான் முடியும். இதே கேமராக்களை பொருத்திய இடத்திலிருந்து நீக்க உங்களுக்கு உத்தரவு வேண்டும். மத்திய, மாநில அரசுகளும், டெல்லி காவல்துறையும் உத்தரவுகளை அளிக்க அதிக காலமாகும். மனுவின் அடுத்த விசாரணை வரும் 30ம் தேதி நடைபெறும்’. இவ்வாறு கூறினர்.
No comments:
Post a Comment