Latest News

தமிழ்நாடு முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்கள்


தமிழ்நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நாளை நடக்கிறது.

போலியோ சொட்டு மருந்து முகாம்

ஜெயலலிதாவின் சீரிய வழிகாட்டுதலோடு தமிழ்நாடு போலியோ இல்லாத நிலையை அடைந்துள்ளது. இந்த நிலையை தக்க வைத்துக்கொள்ளவும், குழந்தைகளை போலியோ வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதும் மிகவும் இன்றியமையாதது ஆகும். போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை (18-ந்தேதி) நடைபெற உள்ளது.

ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்களில் என தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்து 51 சொட்டு மருந்து மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2 லட்சம் ஊழியர்கள்

போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் நாளில் பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், விமான நிலையங்களில் என ஆயிரத்து 652 நகரும் மையங்கள் நிறுவப்பட்டு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு ஆயிரம் நடமாடும் குழுக்கள் மூலமாக சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. சொட்டு மருந்து முகாமில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுகிறார்கள்.

விரலில் மை

சொட்டு மருந்து காலை7 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படும். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு முதல் தவணை 18-ந்தேதியன்றும், இரண்டாம் தவணை பிப்ரவரி மாதம் 22-ந்தேதியன்றும் சொட்டு மருந்து கொடுக்கப்படவேண்டும். தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாட்களில் மீண்டும் சொட்டு மருந்து கொடுக்கவேண்டும்.

முகாம் நடைபெறும் தினத்தன்று போலியோ சொட்டு மருந்து வழங்க தனியார் டாக்டர்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். இடம் பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு விரலில் மை வைக்கப்படுகிறது. இது விடுபடும் குழந்தைகளை கண்டறிய உதவுகிறது.

மேற்கண்ட தகவல் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.