அரியானாவில் 16 வயது சிறுவன் ஒருவன் 11,000 வோல்ட் மின்சாரத்தை தனது உடலில் தாங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அரியானாவில் உள்ள சோனிபட் நகரின் அருகே உள்ள குக்கிராமத்தை சேர்ந்த 16 வயது வாலிபன் தீபக் ஜங்ரா, மூன்று வருடங்களுக்கு முன் ஹீட்டரை சரி செய்தபோது கையில் இருந்த ஸ்குருடிரைவர் மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும் ஒயரின் மீது பட்டுள்ளது.
ஆனால் அவனுக்கு ஷாக் அடிப்பதற்கு பதிலாக அந்த கிராமத்திற்கே மின்சாரம் தடைபட்டுள்ளது.
பின்னர் தனக்கு ஏதோ ஒரு சக்தி இருப்பதை புரிந்து கொண்ட அவன் தொடர்ந்து வேறு வேறு வோல்டேஜூகள் கொண்ட மின்சாரத்தை சோதித்துள்ளான்.
தன்னால் எவ்வளவு மின்சாரத்தை தான் தாங்க முடியும் என்று சோதனை செய்ய விரும்பி கிராமத்தில் உள்ள மின்கம்பத்தில் ஏறி 11000 வோல்ட் மின்சாரத்தை தொடச்சென்றான்.
அப்போது அவனது தாய் உட்பட அங்கு கூடிய கிராம மக்கள் அனைவரும் அவன் தற்கொலை செய்து கொள்வதாக எண்ணி கீழே இறங்கும் படி சத்தம் போட்டுள்ளனர்.
ஆனால் 11000 வோல்ட் மின்சாரத்தை தொட்ட பிறகும் அவன் உயிரோடு இருப்பதை பார்த்து அதிசயித்துள்ளனர்.
மேலும், கிராமத்தினரால் அதிசய மனிதனாக பார்க்கப்படும் ஜங்ரா நடிகரை போல பிரபலமாகியிருந்தாலும், மருத்துவர்களோ இது ஆபத்தென்றும் இது பல்வேறு குறைபாடுகளை உண்டாக்குமென்றும் எச்சரித்துள்ளனர்.
No comments:
Post a Comment