நாட்டின் முதலாவது பிரதமராக இருந்த நேருதான நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் சோவியத் ரஷ்யாவில் கொல்லப்படுவதில் முக்கிய பங்கு வகித்தார் என்று பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் சர்ச்சை தகவலை தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தின் மீரட் நகரில் நேற்று நடைபெற்ற நேதாஜி சுபாஷ்சந்திர போஸின் பிறந்த நாள் நிகழ்வில் சுப்பிரமணியன் சுவாமி பேசியதாவது: 2வது உலகப் போர் முடிவடைந்த நிலையில் சுபாஷ் சந்திர போஸ் போர்க்குற்றவாளியாக தேடப்பட்டார். அப்போது சோவியத் ரஷ்யாவுடன் நட்புறவு கொண்டிருந்தார் நேதாஜி.
சோவியத் ரஷ்யாவில்,...
இதனால் சோவியத் ரஷ்யா தமக்கு அடைக்கலம் கொடுக்கும் என்றும் நேதாஜி முழுமையாக நம்பினார். இதனால் அவர் சோவியத் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த மன்சூரியா என்ற இடத்துக்கு சென்றடைந்தார்.
சிறைபிடிப்பு
அதன் பின்னர் அப்போதைய ரஷ்யா அதிபர் ஸ்டாலினை நேதாஜி சந்தித்த போது கைதியாக சிறைபிடிக்கப்பட்டார்.
நேருவுக்கு ஸ்டாலின் கடிதம்
இதனைத் தொடர்ந்து 1945ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நேருவுக்கு ஸ்டாலின் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் தம்முடைய கஸ்டடியில்தான் நேதாஜி இருப்பதாகவும் அவரை என்ன செய்ய வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டிருந்தார்.
பிரிட்டிஷ் பிரதமருக்கு தகவல் கொடுத்த நேரு
உடனடியாக 1945ஆம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி நேரு தம்முடைய ஸ்டெனோகிராபர் சியாம் லால் ஜெயின் என்பவரை அழைத்து இங்கிலாந்து பிரதமருக்கு ஒரு கடிதம் அனுப்ப உத்தரவிட்டார். இந்த உண்மைகளை 1970ஆம் ஆண்டு நேதாஜி மரணம் தொடர்பாக விசாரித்த கோசலா கமிஷன் முன்பு ஜெயின் கூறியுள்ளார். Show Thumbnail
ரஷ்யாவில் நேதாஜி கொலை
அதாவது ஜெயின் கூறியபடி, சோவியத் ரஷ்யாவில் நேதாஜி சிறையில் இருப்பதை பிரிட்டிஷ் பிரதமருக்கு நேரு தெரியப்படுத்தியிருக்கிறார். அதன் பின்னர் சோவியத் ரஷ்யாவுக்கு சென்ற பிரிட்டிஷ் அதிகாரிகள் நேதாஜியை கொல்ல உத்தரவிட்டிருக்க வேண்டும். இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறினார். Show Thumbnail
நேதாஜி குடும்பத்தினர் மறுப்பு
ஆனால் சுப்பிரமணியன் சுவாமியின் இந்த கருத்தை நேதாஜியின் குடும்பத்தினர் மறுத்துள்ளனர். அவரது குடும்பத்தைச் சேர்ந்த சந்திரகுமார் போஸ் கூறுகையில், நேதாஜி சிங்கப்பூரில் 1943ஆம் ஆண்டு அக்டோபர் 21-ல் அமைத்த ஆசாத் ஹிந்த் அரசை அங்கீகரித்த 11 நாடுகளில் சோவியத் யூனியனும் ஒன்று. அப்படியிருக்கும் போது சோவியத் யூனியனால் நேதாஜி கொல்லப்பட்டிருப்பார் என்பது சரியானது அல்ல.. Show Thumbnail
ஆவணங்களைப் பகிரங்கப்படுத்துக
2005ஆம் ஆண்டு நீதிபதி முகர்ஜி கமிஷனோ தைவான் விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை என்று கூறியது. நேதாஜி மாயம் தொடர்பான கோப்புகளை முதலில் பகிரங்கப்படுத்த வேண்டும். அதன் பின்னர் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றார். Show Thumbnail
No comments:
Post a Comment