தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய வழக்கில் மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வியை குற்றவாளி என்று தீர்ப்பளித்த ராம்பூர் நீதிமன்றம் அவருக்கு 1 வருட சிறைதண்டனையும் ரூ 2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2009 -ஆம் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்த முக்தர் அப்பாஸ் நக்வியின் கார் கன்வாய் பரிசோதனைக்காக போலீசாரால் நிறுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரது ஆதரவாளர்கள் போலீஸ் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவரது ஆதரவாளர்கள் முன்னிலையில் முக்தர் அப்பாஸ் நக்வி பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது சட்டவிரோத கூட்டம் என்று அவர் மீது வழக்குக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை ராம்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம், முக்தர் அப்பாஸ் நக்வி உட்பட 19 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது. மேலும், முக்தர் அப்பாஸ் நக்விக்கு 1 வருட சிறை தண்டனையும் ரூ 2 ஆயிரம் அபரதாமும் விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்ட அவருக்கு உடனடியாக நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் சிறுபான்மை நலத்துறை இணை அமைச்சராக முக்தர் அப்பாஸ் நக்வி பதவி வகித்து வருகிறார்.
தனக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து கருத்து கூறிய முக்தர் அப்பாஸ் நக்வி, இது அரசியல் உள்நோக்கம் கொண்ட வழக்கு என தெரிவித்தார். ஒரு ஆண்டனை மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பிரநிதித்துவ சட்டத்தின்படி முக்தர் அப்பாஸ் நக்வி தகுதி நீக்கம் செய்யப்பட மாட்டார் .
No comments:
Post a Comment