சீனாவில் நபர் ஒருவர் பணத்தை பார்த்து கோமாவிலிருந்து விழித்துக் கொண்டுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவைச் சேர்ந்த ஜியோ லீ (30) என்ற நபர், தன் தொழிலை மேம்படுத்துவது தொடர்பாக ஒருவார காலமாக தூங்காமல் இணையத்திலேயே உலாவிக் கொண்டிருந்துள்ளார்.
இதனால் கடந்த 2013ம் ஆண்டு திடீரென மயங்கி விழுந்து கோமா நிலைக்குப் போன அவர் கடந்த ஓராண்டிற்கும் மேலாக கண் விழிக்கவில்லை. இவருக்கு மருத்துவர்கள் எவ்வளவோ சிகிச்சை அளித்துப் பார்த்தும் ஜியோவின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை.
எனவே ஜியோ மிகவும் நேசிக்கும் பொருள் குறித்து அவரது குடும்பத்தினரிடம் மருத்துவர்கள் விசாரித்ததில் அவர்கள் அனைவரும் “பணம்” என ஒருமித்த குரலில் கூறியுள்ளனர்.
இதனையடுத்து பணத்தைக் கொண்டு ஜியோவிற்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்த மருத்துவர்கள் 100 யென் நோட்டை ஜியோவின் மூக்கிற்கு அருகில் கொண்டு சென்று அதன் வாசத்தை அவரை நுகரச் செய்துள்ளனர். மேலும், அந்நோட்டை கசக்கி அதன் சத்தத்தையும் ஜியோவைக் கேட்கச் செய்துள்ளனர். அப்போது ஜியோவில் உடலில் அசைவு தெரிந்துள்ளது. அவரது கைகள் மேலெழும்பி ரூபாய் நோட்டைப் பறிக்க முயற்சித்துள்ளது. கண் இமைகளிலும் லேசான அசைவு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஜியோவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கூறுகையில், எனது 30 ஆண்டுகால மருத்துவ சேவையில் இப்படி ஒரு அதிசயத்தை இப்போது தான் முதன்முறையாக பார்க்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஜியோ முழுமையாக குணமடைந்து வராவிட்டாலும், தொடர்ந்து அவருக்கு ‘மணி’தெரபி அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை சற்று முன்னேறி வருவதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment