அதிரை காட்டுப்பள்ளி தெருவை சேர்ந்தவர் முஹம்மது யூசுப் ( வயது 70 ). வாய் பேச இயலாத மாற்று திறனாளி. இவர் தனது சிறுதொழிலாக அதிரை சுற்று வட்டாரப்பகுதியில் கொண்டை கடலை வியாபாரம் செய்து வந்தார். அவ்வபோது கஞ்சி வியாபாரமும் செய்து வந்தார். உடல்நிலை குன்றியதால் சிறிது காலம் வியாபாரம் செய்வதை நிறுத்தி இருந்தார். இந்நிலையில் இன்று இரவு வஃபாத்தாகி விட்டார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9 மணியளவில் மேலத்தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
No comments:
Post a Comment