டெல்லியில் போதை விருந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 40 சிறுவர்கள் மற்றும் 4 இளம்பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டின் தலைநகரான டெல்லி அருகே குர்கானில் போதை விருந்து நடப்பதாக குர்கான் பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, போதை பொருள் தடுப்பு அதிகாரிகளுடன் இணைந்து பொலிசார் நடத்திய தேடுதல் வேட்டையில் 40 சிறுவர்களும் 4 இளம்பெண்களும் கைது செய்யப்பட்டனர்.
குர்கான் அருகே உள்ள பிசார் கிராமத்தில் இந்த போதை விருந்து நடந்துள்ளது. அங்குள்ள பண்ணை வீட்டிற்குள் பொலிசார் நுழைந்த போது அனைவரும் போதையில் மிதந்தவாறு நடனமாடிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் அனைவரையும் சுற்றிவளைத்து கைது செய்தனர். அப்போது பண்ணை வீட்டில் தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்கள் பயன்படுத்தியதற்கான காலி பாக்கெட்டுகளும் கிடைத்தன. அவற்றை போலீசார் சோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
இந்த போதை விருந்தில் கலந்து கொள்ளுமாறு வாட்ஸ் ஆப், பேஸ்புக்கில் அழைப்பு விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment