மதுரை காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளம்பெண் சரண்யாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த 6ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தன்று, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு பெண் ஒருவர் போன் செய்து இன்னும் சற்று நேரத்தில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வெடிகுண்டு வெடிக்கும்’, எனக் கூறிவிட்டு போனை துண்டித்து விட்டார்.
இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் அலுவலகத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர். நீண்ட சோதனைக்கு பின்னர் வெறும் புரளி என தெரியவந்தது.
இதுதொடர்பாக, போலீசார் மேற்கொண்ட விசாரணையில், போனில் மிரட்டல் விடுத்தவர் மதுரை மேட்டுக்கார தெருவைச் சேர்ந்த செல்வக்குமார் மகள் சரண்யா(21) என தெரியவந்தது. இவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment