உலகில், முதன் முதலாக யாருக்கு புற்றுநோய் வந்தது? இது மருத்துவர்களே யோசிக்க வைக்கும் மில்லியன் டாலர் கேள்வி! அதற்கு சமீபத்தில் நடந்த அகழ்வாராய்ச்சி விடை சொல்கிறது.
சைபிரியா பகுதியில் நடந்த சமீபத்திய அகழ்வாராய்ச்சியில் 4,500 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த போன ஒருவரின் எலும்புக்கூடை கண்டுபிடித்துள்ளனர். வட்ட வடிவிலான சமாதியில் ஒருவர் எலும்புகளை அலங்கார பொருளாக உடுத்தி, பக்கத்தில் ஒரு ஆயுதத்தோடு புதைக்கப்பட்டதையும் கண்டுபிடித்துள்ளனர்.
இது ஆராய்ச்சியாளர்களுக்கே சற்று விநோதமாகத் தோன்ற உடனே அந்த எலும்பு கூட்டைப் பரிசோதிக்கும்படி மருத்துவர்களை அணுகியிருக்கிறார்கள்.
மருத்துவர்கள் அந்த எலும்பு கூட்டை பரிசோதித்ததும், அதிர்ச்சியில் உறைந்தனர். காரணம், அந்த நபர் நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளது தெரியவந்துள்ளது. அந்த நபர் மிகவும் நோய் வாய்பட்டு, அந்திம காலத்தில் பெரும் வலியை அனுபவித்ததாகவும், சாகும்போது அவருக்கு 35 முதல் 40 வயது வரை இருக்ககூடும் என்றும் அகழ்வாராய்ச்சியாளர்களிடம் அறிக்கைக் சமர்ப்பித்திருக்கிறார்கள்.
இதைப் பற்றி அகழ்வாராய்ச்சியாளர்கள் கூறும்போது, “5000, 6000 வருடங்களுக்கு முன்னரே புற்றுநோய் இருந்தது எங்களுக்கு ஏற்கனவே தெரியும். ஆனால், எங்களிடம் அதற்கான சரியான சான்றுகள் இல்லை. இப்போது முதன்முதலாக 4500 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஒருவருக்குப் புற்று நோய் தாக்கியதை உறுதிப்படுத்தியுள்ளோம்.
அந்த நபரை அடக்கம் செய்த முறை மிகவும் வித்தியாசமாக இருந்ததைப் பார்த்தவுடன், புதியதாக ஒன்றை கண்டுபிடித்து இருக்கிறோம். அந்த நபர் வாழ்ந்தது செம்பு காலத்தில். அப்போது அடக்கம் செய்யும் முறைக் கும் இதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.
இறந்தவர் ஒரு வேட்டைக்காரனாக இருந்திருக்க வேண்டும். அவர் வாழ்ந்த இடம் மலை காடு, பெரும்பாலும் மீன்களையே உணவாக உண்டு இருப்பார். அவருக்கு, வட்டவடிவில் சமாதி அமைத்து, கையில் ஆயுதத்தோடு அடக்கம் செய்தால், புற்றுநோய் மற்றவர்களைத் தாக்காமல் இருக்கும் என்று நம்பி அப்படிச் செய்திருக்கக்கூடும். இந்த நொடி வரை புற்றுநோய் தாக்கிய முதல் நபர் என்ற பெருமை அவரையே சேரும்” என்றார்கள்.
மேற்கத்திய நாடுகளில் நான்கில் ஒருவருக்குப் புற்றுநோயால் மரணம் ஏற்பட்டு வருகிறது. மருத்துவர்க ளோ, பிளாஸ்டிக் பயன்படுத்துவதாலும், உலகம் மாசடைந்து வருவதாலும் புற்று நோய் வருகிறது என்று சொல்லி வரும் போது செம்பை மட்டுமே பயன்படுத்தி வந்த காலத்தில், வாகனமே இல்லாத காலத்தில் ஒருவருக்குப் புற்று நோய் வந்தது, நம் மருத்துவ உலகை கொஞ்சம் ஆச்சர்யபடுத்தியுள்ளது. அது விடை தெரியாத பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது மருத்துவ உலகில்.
No comments:
Post a Comment