சீமை கருவேலமரங்களால் தமிழகம் பாலைவனமாக மாறி வருவதை தடுக்கும் நோக்கத்தில் சீமை கருவேலமரம் ஒழிப்பு இயக்கம் சார்பாக தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக இன்று (07-12-2014 )சென்னை – வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தின்போது பொதுமக்களுக்கு துண்டுபிரசுரம் வழங்கப்பட்டு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. சீமை கருவேலமரமும் – தமிழ் மண்ணும் என்ற தலைப்பில் உண்ணாவிரத மேடையில் கலந்துரையாடல் நடைபெற்றது.
அந்த கலந்துரையாடல் வழியாக சீமை கருவேலமரம் தடை செய்யப்பட வேண்டியதன் அவசியம் , செயற்கை உரங்களால் ஏற்பட்ட பாதிப்பு , இயற்கை வள கொள்ளை போன்றவைகள் பற்றி விவாதிக்கப்பட்டது.
1. சீமை கருவேலமரங்களை வளர்க்க , பராமரிக்க தடை விதித்தல்.
2. சீரமைப்பு பணிகளை தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு வழங்குதல்
3. வியாபார நோக்கோடு சீரமைப்பு பணிகளை வழங்கும் மாவட்ட நிர்வாகங்களை முறைப்படுத்துதல், முறைகேடுகளை தவிர்க்க கண்காணிப்பு குழு ஏற்படுத்துதல்.
4. சீரமைக்கப்படும் இடத்தில் உடனடியாக பயன்தரக்கூடிய மரங்களை நடுதல் , பராமரித்தல் என்ற நான்கு கோரிக்கைகள் உண்ணாவிரதத்தில் முன்வைக்கப்பட்டது.
உண்ணாவிரதம் காலை 10.00 மணிக்கு துவங்கி மாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது. இந்நிகழ்விற்கு சீமை கருவேலமரம் ஒழிப்பு இயக்கத்தின் சென்னை மாநகர ஒருங்கிணைப்பாளர் திரு இராம் பிரசாத் தலைமை வகித்தார். முனைவர் திரு . முகம்மது கதாபி முன்னிலை வகித்தார். 12 உறுப்பினர்கள் முழுமையாகவும் , 15 நபர்கள் பகுதியாக கலந்துகொண்டு ஆதரவினை தெரிவித்தார்கள் .இறுதியாக இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஏனாதி பூங்கதிர்வேல் அனைவரையும் வாழ்த்தி நன்றியுரை வழங்கினார்.
- சீமை கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்
தமிழ்நாடு
No comments:
Post a Comment