அமெரிக்க இராணுவத்திலான பாலியல் தாக்குதல்கள் இந்த வருடம் 8 சதவீதத்தால் அதிகரித்து 5983 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் சுமார் மூன்றில் இரு பகுதியினர் தாம் பழிவாங்கும் நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதே சமயம் சுமார் 19000 பேர் தாம் விரும்பத்தகாத பாலியல் தொடர்பை அனுபவிக்க நேர்ந்ததாக தெரிவித்துள்ளனர். அவர்களில் 10500 பேர் ஆண்களாவர். 8500 பேர் பெண்களாவர்.
தமக்கு நேர்ந்த பாலியல் ரீதியான தாக்குதல் குறித்து முறைப்பாடு செய்தமைக்காக தாம் பழிவாங்குதலை எதிர்கொள்ள நேர்ந்ததாக பாதிக்கப்பட்ட பெண்களில் 62 சதவீதமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment