முஸஃபர் நகர் அகதிகள் முகாமில் தங்கியிருந்த இளம்பெண், இரு வாலிபர்களால் வன்புணர்வு செய்யப்பட்டது மீண்டும் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
முஸஃபர் நகரில் பாஜகவினரால் பொய்யாகப் பரப்பப்பட்ட வீடியோவால் முஸ்லிம்களுக்கும் ஜாட் இனத்தினருக்கும் இடையில் கலவரம் வெடித்தது. இதனைத் தொடர்ந்து பல கிராமங்களிலிரிந்தும் முஸ்லிம்கள் வீடுகளை இழந்து அகதி முகாமில் தஞ்சமடைந்தனர்.
தற்போது அகதி முகாமில் தங்கியிருப்போர் மீது வன்முறை தாக்குதல்கள் நடக்கத்துவங்கியுள்ளன. கடந்த வாரத்தில் மூன்று முஸ்லிம் இளைஞர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், தற்போது 20 வயதுள்ள இளம்பெண் ஒருவர் இரு இளைஞர்களால் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார். குற்றவாளிகளைப் பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து அடித்து உதைத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
சச்சின், சுனில் குமார் ஆகிய இரு குற்றவாளிகளையும் காவல்துறை கைது செய்து அவர்கள்மீது வன்புணர்வு வழக்குப் பதிவு செய்துள்ளது.
இச்சம்பவம் அப்பகுதியில் மக்களிடையே மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி : http://indru.todayindia.info/
No comments:
Post a Comment