புதுடெல்லி: கலைஞர் டிவிக்கும், திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழிக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து ஆசீர்வாதம் ஆச்சாரி சாட்சியம் அளித்துள்ளார்.
கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ200 கோடி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடத்தப்பட்ட வழக்கில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி சைனி
முன்னிலையில் அரசுத் தரப்பு சாட்சியான மத்திய தொலைத் தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் கூடுதல் தனிச் செயலாளராக இருந்த ஆச்சாரி ஆஜரானார். அவரிடம், கலைஞர் தொலைக்காட்சி உருவாக்கம் உள்ளிட்ட பல கேள்விகள் கேட்கப்பட்டன.
அப்போது, கலைஞர் தொலைக்காட்சி தொடங்கப்பட்டதில் தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழிக்கு முக்கியப் பங்கு இருப்பதாக ஆச்சர்யா சாட்சியம் அளித்துள்ளார். இதில், கலைஞர் தொலைக்காட்சிக்கு உரிமம் பெற அதன் பங்குதாரர்களில் ஒருவரான சரத்குமார் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராசாவை பலமுறை சந்தித்தாகவும் அவர் கூறி உள்ளார்.
ஆச்சாரியிடம் சாட்சியம் பதிவு செய்யப்பட்ட பின்னர் இந்த வழக்கு விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு நீதிபதி ஒத்திவைத்தார். இவ்வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment