Latest News

நாடகமா? நடந்ததா? விஸ்வரூபம் எடுக்கும் சகோதரிகளின் தாக்குதல் பிரச்சனை (வீடியோ இணைப்பு)

ஹரியானா மாநிலம் ரோதக் நகரில் ஓடும் பேருந்தில், 2 சகோதரிகளிடம் 3 இளைஞர்கள் தவறாக நடந்ததாக கூறப்படும் விவகாரத்தில் திடீர் திருப்பம் நிகழ்ந்துள்ளது.

வெளிவந்ததுரோதக்கைச் சேர்ந்த சகோதரிகளான ஆர்த்தி மற்றும் பூஜா ஆகியோர், மூன்று இளைஞர்களை பெல்ட்டால் சரமாரியாக அடித்தனர். இதுதொடர்பான காட்சி வீடியோவில் .
படமாக்கப்பட்டு
இதையடுத்து குல்தீப், மோஹித், தீபக் ஆகிய மூன்று இளைஞர்களையும் பொலிசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மீது எந்தத் தவறும் இல்லை என்று அந்தப் பேருந்தில் பயணம் செய்த 6 பெண்கள் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக தங்களது சாட்சியத்தையும் அவர்கள் பதிவு செய்துள்ளனர். மேலும் ரோதக் டிஎஸ்பி யாஷ்பால் கத்னா இதனை உறுதிப்படுத்தியதையடுத்து, இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாகவும் டிஎஸ்பி கூறியுள்ளார்.
சோனிப்பட்டைச் சேர்ந்த விமலா என்ற பெண் கொடுத்துள்ள சாட்சியத்தில், ரோதக் பேருந்து நிலையத்தில், பேருந்து நின்றிருந்தபோது உடல் நலம் இல்லாத ஒரு பெண்ணுக்காக டிக்கெட் வாங்கித் தருமாறு நான் குல்தீப்பிடம் பணம் கொடுத்து கேட்டேன். அப்போது அந்த உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண் உட்கார வேண்டிய சீ்ட்டில் இந்த இரு சகோதரிகளும் உட்கார்ந்திருந்தனர்.
இதைப் பார்த்த குல்தீப், அவர்களிடம் வயதான அவரை உட்கார இடம் கொடுக்குமாறு கூறினார். மேலும் டிக்கெட்டையும் காட்டினார். ஆனால் அவர்கள் எழுந்திருக்கவில்லை.
மாறாக சகோதரிகள் இருவரும் குல்தீப்பிடம் சண்டைக்குப் போய், திடீரென பெல்ட்டை எடுத்து குல்தீப்பை அடிக்க ஆரம்பித்து விட்டனர். இதை ஒரு பெண், தான் வைத்திருந்த கைப்பேசியில் பதிவு செய்ய ஆரம்பித்தார்.
இந்த நிலையில் குல்தீப் பேருந்திலிருந்து இறங்கி விட்டார். பொலிசார் வந்த பின் குல்தீப்பையும், அவருடன் வந்த மற்ற இருவரையும் சேர்த்து சகோதரிகள் புகார் கூறினர்.
அந்த மூன்று இளைஞர்களுமே தவறு செய்யவில்லை என்று விமலா கூறியுள்ளார். இதேபோல மேலும் 5 பெண்களும் கூறியுள்ளனர். இதில் 4 பேர் அந்த சகோதரிகளின் சொந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.